பன்னீர்ச்செல்வம் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் – அதிமுக எம்.எல்.ஏ க்கள் பேச்சால் பரபரப்பு

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் போடிநாயக்கனூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று அ.தி.மு.க. கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசினர்.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வில் புதிய அணியை உருவாக்கிவருகிறார். இதனிடையே, சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றிபெற்றது. ஆனால், இந்த வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக பன்னீர்செல்வம் உள்பட பதினொரு எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். அ.தி.மு.க கொறடா உத்தரவை எதிர்த்து வாக்களித்ததால், இவர்கள் மீது கட்சித்தாவல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க சபாநாயகர் முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தேனியில் அ.தி.மு.க மாவட்ட அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் தங்கத் தமிழ்செல்வன், கதிர்காமு,ஜக்கையன் ஆகியோர் தலைமையில் இன்று கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர்கள், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் போடிநாயக்கனூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும். இந்தத் தொகுதியில் டி.டி.வி.தினகரன் நின்று ஜெயிப்பார்” என்று கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com