சற்று முன்
Home / அடையாளம் / ஈழத்தின் பிரபல தமிழ் எழுத்தாளரும் வரலாற்று ஆசிரியருமான முல்லைமணி காலமானார்

ஈழத்தின் பிரபல தமிழ் எழுத்தாளரும் வரலாற்று ஆசிரியருமான முல்லைமணி காலமானார்

ஈழத்தின் பிரபல தமிழ் எழுத்தாளரும் வரலாற்று ஆசிரியருமான முல்லைமணி எனப்படும் வேலுப்பிள்ளை சுப்ரமணியம் காலமானார்.

முல்லைத்தீவு முள்ளியவளையை பிறப்பிடமாக கொண்டவர் அவர், வவுனியா பண்டாரிகுளத்தில் நேற்றைய தினம் இயற்கை எய்தியுள்ளார். இவர் எழுத்திய பண்டாரவன்னியன் என்ற நாடகம் உலகளாவிய ரீதியில் பிரபலம் பெற்றிருந்தது.

அத்துடன் வன்னியர் திலகம், கமுகம் சோலை, அரசிகள் அழுவதில்லை போன்ற பிரபலமான நாவல்களையும் அவர் எழுதியுள்ளார். இவர் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் முன்னாள்விரிவுரையாளர்.

பல வரலாற்று கட்டுரைகளையும் இலக்கிய சிந்தனைகளையும் எழுதிய முல்லைமணி வேலுப்பிள்ளை சுப்ரமணியம், யாழ்ப்பாண பல்கலைகழகத்தினால் கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் எழுத்துலக பங்களிப்புக்காக அவருக்கு 2015ஆம் ஆண்டுக்கான சாஹித்திய ரத்ன விருது வழங்கி ஜனாதிபதியினால் கௌரவிக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 398 பேராக அதிகரிப்பு ..!

காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பிரதேசங்களிலும் நாடளாவிய ரீதியிலும் நபர்களை தாக்கி அரச மற்றும் தனியார் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com