மலையகத்திற்கான ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியது (2ம் இணைப்பு)

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

நாவலப்பிட்டியிலிருந்து கொட்டகலை வரை எரிபொருள் தாங்கி ஏற்றிச் சென்ற புகையிரதம் 27.09.2016 அன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் தடம் புரண்டிருந்தது.

தற்போது ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளதுடன், ரயில்கள் வழமைப் போன்று சேவையில் ஈடுபடுவதாகவும் நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது.img_0959 img_0967 img_0975 img_0979 img_0991 img_0998

முன்னர் வெளியான செய்தி

நாவலப்பிட்டியிலிருந்து கொட்டகலை வரை எரிபொருள் தாங்கி ஏற்றிச் சென்ற புகையிரதம் 27.09.2016 அன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக 27.09.2016 அன்று காலை முதல் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை ரயில் நிலைய பகுதியில் உள்ள கொட்டகலை எரிபொருள் மத்திய நிலையத்திற்கு எரிபொருள் இறக்கும் பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புகையிரதத்தில் 3 எரிபொருள் தாங்கிகள் இருந்த வேளையில் ஒரு என்ஜீன் உட்பட ஒரு எரிபொருள் தாங்கியும் இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக புகையிரத அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன், புகையிரத பாதையும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதையை சீர் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.img_0934 img_0941 img_0944 vlcsnap-2016-09-27-06h30m50s128 vlcsnap-2016-09-27-06h33m23s123

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com