மன்னார் கட்டுக்கரை குளத்தை அண்டிய பகுதிகளில் தொல் பொருட்கள் மீட்பு – யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் சிறப்பு கலை மாணவர்கள் அகழ்வு நடவடிக்கைகளில்

மன்னார் மாதோட்ட கட்டுக்கரை குளத்தை அண்மித்த குருவில்வான் பகுதியில் பண்டையக்கால தொல் பொருள் எச்சங்கள் தற்போது மீட்கப்பட்டு வருவதாக யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் பா.புஸ்பரெட்ணம் தெரிவசித்தார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் சிறப்பு கலை மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் பா.புஸ்பரெட்ணம் தலைமையில் கடந்த முதலாம் திகதி முதல் மன்னார் மாதோட்ட கட்டுக்கரை குளத்தை அண்மித்த குருவில்வான் பகுதியில் தொல்பொருள் அகழ்வு பணிகளில் ஈடுபட்டனர்.

இதன் போது 1400 ஆம் ஆண்டிற்கு முன்னர் அங்கு காணப்பட்ட பல்வேறு பொருட்கள் மண்ணில் புதையுண்ட நிலையில் தொல் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளது.

தொல் பொருள் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தின் அனுமதியுடன் மன்னார் அலுவலகரும் குறித்த பணியில் ஈடுபட்டு வருகின்றார்.

-குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொல் பொருள் காணப்படுவதாக பேராசிரியர் பா.புஸ்பரெட்ணம் தெரிவித்தார்.

தற்போது மீட்கப்பட்ட தொல் பொருள் அகழ்வுகளின் போது சுடு மண்ணால் அமைக்கப்பட்ட மணிகள்,யானைகள்,குதிரை போன்றவற்றின் பாகங்கள்,சிவலிங்கத்தின் பாகங்கள்,சுடுமண்ணால் செய்யப்பட்ட தெய்வங்களின் பாகங்கள் போன்ற பல்வேறு தொல்பொருட்கள் பாகங்களாக மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் தற்போது மீட்கப்பட்டுள்ள தொல் பொருட்களின் சிதைவுகள் ‘ஐயனார் வழிபாட்டு முறைக்கான’ விஞ்ஞான பூர்வமான தடையப்பொருட்களாக இருப்பதாக பேராசிரியர் தெரிவித்தார்.

தற்போது மீட்கப்பட்டுள்ள தொல் பொருட்களின் பாகங்களை பாதுகாத்தல்,வரலாற்று சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல்,மற்றும் மீட்கப்படுகின்ற பொருட்களை பாதுகாக்கு மக்களுக்கு தொழிவு படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.a-01-2 a-01-3 a-01-4 a-01-6 a-01-8 a-01-9 a-01-10 a-01-11 a-01-12 a-01-13 dsc_0004 unnamed-1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com