மடக்கும்புற தோட்டத்தில் ஆர்ப்பாட்டம்

லவாக்கலை  மடக்கும்புற மிடில் டிவிசன் தோட்டத்தை சேர்ந்த 95 இற்கு மேற்பட்ட  தொழிலாளர்கள் 19.09.2016 அன்று காலை 10 மணி முதல் 12 மணிவரை தோட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இத்தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய சலுகைகளை வழங்காத காரணத்தினால் சலுகைகளை உடனடியாக வழங்குமாறு கோரி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தோட்ட நிர்வாகத்தால் தேயிலை மலைகளை முறையாக பராமரிக்காமல்  கைவிட்டுள்ளதாகவும் இதன் காரனமாக தேயிலை மலைகள் காடாகியதால் தற்போது வருமான ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக இவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

தேயிலை மலைகள் காடாகி காணப்படுவதால் விசப்பூச்சிகள், விச பாம்புகள் முலம் பல சிரமங்களை எதிர் நோக்கும்  தொழிலாளர்கள் தொழில் செய்ய முடியாமல் அச்சத்துடன் தொழில் செய்வதாகவும் இதற்கு தோட்ட நிர்வாகம்; எவ்வித நடவடிக்கைகள் எடுக்கவில்லையென தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும் தேயிலை மலைகளில் பற்கள் வளர்ந்து காணப்படுவதால் அட்டைகள் அதிகரித்துள்ளது இதன் காரணமான தொழில் செய்யூம் போது உடலில் அட்டை கடிப்பதால் உடம்பில் பல நோய்கள் ஏற்பட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு அட்டைக்கடித்த இடங்களில் உள்ள காயங்கள் குணமாக வில்லை இதன் காரனமாக பல தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டு இருப்பதால் தொடர்ச்சியாக தொழில் செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கோசங்களை எழுப்பினார்கள்.

இத்தோட்ட பகுதியில் உள்ள தேயிலை செடிகளில் காட்டு எருமைகள் நடமாடுவதால் பெண்கள் தொழிலாளர்கள் நிம்மதியாக தொழில்  செய்யமுடியாமல் மிகவும் கஸ்டத்துடன் இருக்கின்றனர்.

இது இவ்வாறு இருக்கையில் இரவு நேரங்களில்  காட்டு எருமையின் நடமாற்றம் அதிகரித்துள்ளதால் இத்தோட்ட மக்கள்  இரவு நேரங்களில் வெளியில் செல்லமுடியாத நிலையில் உள்ளனர்.

தொழிலாளர்களின் நலன் கருதி தோட்ட நிர்வாகம் செயற்படாமல் தமது பிரச்சனைகளை கண்டுக்கொள்ளாமல் அசமந்த போக்கினை கடைப்பிடிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமது பிரச்சனைகளுக்கு தோட்ட நிர்வாகம் அரசியல் வாதிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படபோவதாக இவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் எதுவித முடிவும் கிடைக்காமல் அவ்விடத்தில் இருந்த களைந்து சென்றனர்.20160919_103331_resized 20160919_103400_resized 20160919_104827_resized 20160919_104836_resized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com