சுய தொழிலை ஊக்குவிப்பதற்காக பொதி செய்யும் உபகரணம், விவசாய உபகரணம் என்பன வழங்கி வைப்பு

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுய தொழிலை ஊக்குவிப்பதற்காக அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சுமார் 400 நபர்களுக்கு பொதி செய்யும் உபகரணம், விவசாய உபகரணம், Saloon Kit, Taper Machine என்பன வழங்கி வைக்கும் நிகழ்வு 25.09.2016 அன்று காலை நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி மாவட்டங்களில் அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை பிரதேச செயலகங்கள் ஊடாக பெறப்பட்ட 1100 நபர்களுக்காக 7800 கூரைத்தகடுகளை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் திகாம்பரம், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சரஸ்வதி சிவகுரு, அமைச்சின் செயலாளர், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் திரு.நகுலேஸ்வரன் மற்றும் பல முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.dsc04306 dsc04321 dsc04341

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com