சம்பள உயர்வை வலியுறுத்தி மலையகத்தில் தொடர் போராட்டங்கள் – கண்டுகொள்ளுமா அரசாங்கம் !

dsc01954வாக்குறுதிகள் வழங்கப்பட்டபோதும் சம்பள உயர்வு வழங்கப்படாது மலையக தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவரும் நிலையில் இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது எனக்கருதி மலையகத்தின் பல்வேறு தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்புப் போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளனர்.

மயைக தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்கள் பற்றிய ஒரு தொகுப்பு

அட்டன் தரவளை, சலங்கந்தை, இன்வெரி, ஒட்டரி, எட்லி, மாணிக்கவத்தை, போடைஸ், பட்டல்கலை, என்சி தோட்ட தொழிலாளர்கள் அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியை மறித்து சாலை போராட்டத்தில்

காலம் தாழ்த்தப்பட்ட தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தொழிலாளர்கள் புறக்கனிக்கப்பட்டு வருவதை இனிமேலும் பொருத்துக்கொள்ள முடியாது உடனடியாக தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்கள் தலையீட்டு சம்பள உயர்வினை பெற்றுத்தர அழுத்தம் கொடுத்து அட்டன் தரவளை, சலங்கந்தை, இன்வெரி, ஒட்டரி, எட்லி, மாணிக்கவத்தை, போடைஸ், பட்டல்கலை, என்சி ஆகிய தோட்டப்பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரம் தோட்ட தொழிலாளர்கள் அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியை மறித்து சாலை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.dsc01930

ஆயிரம் ரூபாய் சம்பளம் வேண்டுமனெ கோரி, அட்டன் வனராஜா மேற்பிரிவு தோட்ட தொழிலாளர்கள் சுமார் 100ற்கும் மேற்பட்டவர்கள் 29.09.2016 அன்று காலை அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் பதாதைகளை ஏந்திய வண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு டிக்கோயா நகரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதேவேளை டிக்கோயா பட்டல்கலை தோட்ட தொழிலாளர்களும் அட்டன் டயகம பிரதான வீதியின் போடைஸ் சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அட்டன் ஸ்டிரதன் பிரதேச தோட்ட தொழிலாளர்கள் கொழும்பு பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பள உயர்வினை வழங்கவேண்டும் என கோரி அட்டன் ஸ்டிரதன் பிரதேச தோட்ட தொழிலாளர்கள் 29.09.2016 அன்று காலை அட்டன் கொழும்பு பிரதான வீதியை மறித்து 100 இற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன் போது சில மணி நேரம் போக்குவரத்து சேவை தடைப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறும் உடனடியாக நியாயமான சம்பளத்தினை வழங்க கம்பனிகள் நடவடிக்கை எடுக்குமாறு கோரி கோஷங்களை எழுப்பினர்.

dsc01927

வட்டவளை டெம்பள்ஸ்டோவ் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தோட்ட தொழிலாளர்களுக்கான முறையான சம்பள உயர்வை பெற்று தர வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து வட்டவளை டெம்பள்ஸ்டோவ் தோட்ட தொழிலாளர்கள் அட்டன் கொழும்பு பிரதான வீதியில் ரொசல்ல பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

29.09.2016 அன்று காலை 9 மணி முதல் சுமார் ஒரு மணித்தியாலயம் பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பத்தனை போகாவத்தை தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நியாயமான சம்பளத்தை பெற்றுகொடுக்க தோட்ட கம்பனிகள் முன்வரவேண்டுமென கோரி பத்தனை போகாவத்தை தோட்டத் தொழிலாளர்கள் 29.09.2016 அன்று தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் போகாவத்தை நகரத்தில் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.dsc01833

dsc01835

dsc01847

dsc01853

dsc01870

dsc01895

dsc01898

dsc01913

dsc01922

 

dsc01956

dsc01959

dsc01962 img_1078

img_1112

 

vlcsnap-2016-09-29-13h30m29s181

vlcsnap-2016-09-29-13h30m49s128

dsc01818

dsc01821

img_1061

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com