காட்டூனிஸ்ட் அஸ்வின் சுதர்சன் திடீர் மறைவு! – ஆழ்ந்த அனுதாபங்கள் தோழனே !

SAMSUNG CAMERA PICTURES

மாதகலை பிறப்பிடமாக கொண்ட இளம் ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சன் விபத்து ஒன்றில் காலமானார். யாழ்ப்பாணத்தில் வீரகேசரி பத்திரிகையின் உதவி ஆசிரியர்களில் ஒருவராக பணியாற்றினார். இவர் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வியினூடாக BSc in Visual Communication கற்கை நெறியினை கற்று நிறைவு செய்திருந்தார். அக் கற்கை நெறியின் செய்முறை கற்கைக்காக மீனவர்களின் பிரச்சனை தொடர்பாக ஒர் ஆவணப்படம் ஒன்றை தயாரித்து சமர்பித்திருந்தார்.
பின்னர் தினக்குரல் பத்திரிகையில் கேலிசித்திர கலைஞனாக கொழும்பில் இருந்து பணியாற்றினார். அண்மையில் வடக்கு ஊடகவியலாளர் தெற்கிற்கான நட்புறவு பயணத்தை மேற் கொண்ட போது தெற்கு ஊடக நண்பர்களுடன் இணைந்து தன் சக வடக்கு ஊடகவியலாளர்களை வரவேற்று. அவர்களது ஊடக பயணத்திலும் இணைந்து பயணித்தார். வெளிநாடு ஒன்றிற்கான பயணத்தின் போது எதிர்பாராத விபத்தில் காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com