நெடுந்தீவில் இந்திய மீனவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கடற்படையிருக்கு தொடர்பு இல்லை ! – அரசியற் பிரமுகர் சாட்சியம்

boats11994, 1995 காலப்பகுதியில் நெடுந்தீவு கடற்பிரதேசத்தில் இந்திய மீனவர்கள்
வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கடற்படையிருக்கு தொடர்பு இல்லை எனத் தெரிவித்துள்ள யாழ்ப்பாணத்திலிருந்து செயற்பட்டுவரும் அரசியற் கட்சி ஒன்றின் முன்னாள் மூத்த உறுப்பினர் தான் பணியாற்றிய குறித்த கட்சியினரே இந்திய மீனவர்களை நெடுந்தீவில் வைத்து படுகொலை செய்யதாகவும் பின்னர் அப் பழி கடற்படையினரின் மீது சுமத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
1990 ஆம் ஆண்டுகாலப்பகுதி முதல் இவ்வாறு மீனவர்களைத் தாக்குதல், வலைகளை அறுத்தல், வளங்களைச் சூறையாடுதல் போன்ற நடவடிக்கைகளில் தமது அமைப்பு ஈடுபட்டுவந்ததாகத் தெரிவித்த அவர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தாக்குதல்களிற்கான பழிகளை விடுதலைப் புலிகள் மீதும் கடற்படையினர்மீதும் சுமத்திவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு காலமும் இக் குற்றச்சாட்டுக்களை பகிரங்கப்படுத்துவதற்கான சூழல் தனக்கு இல்லை எனத் தெரிவித்துள்ள அவர் தற்போது நல்லாட் ஏற்பட்டுள்ளதால் தன்னால் தனக்கு ஏற்படப்போகும் அச்சுறுத்தலையும் மீறி இவற்றை பகிரங்கப்படுத்த முடிந்துள்ளதாகவும் எனினும் இவற்றை கடந்த ஒருவருடம் எட்டு மாதங்களாக பொலிசாருக்கு தெரியப்படுத்தியபோதும் அவர்கள் தனது வாக்கு மூலங்களை ஏற்று எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர்கள் இவ்வாறு செயற்படுவது தனக்கு ஆச்சரியமளிப்பதாகவும் தெரிவிததுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com