றமழான் நல்லிணக்க நிகழ்வு – யாழ்ப்பாணம்.

WP_20160728_10_44_01_Proதேசிய நல்லிணக்க அமைச்சும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த றமழான் நல்லிணக்க நிகழ்வு  2016.07.28 அன்று யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் வெகு விமர்சையாக அதிபர் திரு.என்.எம்.அஸ்ரப் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேசத்தின் சகோதர பாடசாலைகளும் பங்கேற்றன. கலைகலாசார நிகழ்வுகள் மற்றும் இன ஒற்றுமையை வலியுறுத்தும் நிகழ்வுகள் முக்கியத்துவம் பெற்றுருந்தன.
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ.த.குருகுலராஜா அவர்கள் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டார். வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் கௌரவ.சி.தவராசா, வடக்க மாகாண சபை உறுப்பினர்கள் கௌரவ.அ.அஸ்மின், கௌரவ.இ.ஆர்னோல்ட் ஆகியோரும் இந் நிகழ்வில் பங்கேற்றனர். மதகுருமார்கள் வண. பிதா . சோபன் றூபஸ், சங்கைக்குரிய நாகவிகாராதிபதி விமலஸ்ரீ தேரர், மௌலவி அப்துல் அஸீஸ் ஆகியோர் ஆசியுரைகளை வழங்கினார்கள்.

WP_20160728_11_32_13_Pro
இங்கு உரை நிகழ்த்திய அதிபர் அவர்கள் வடக்குமாகாணத்தில் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மிக முக்கியமானது. அதனை மாணவர்களிடத்திலே ஏற்படுத்துவது அத்தியவசியமானது என்று குறிப்பிட்டார். நிகழ்வுகளை ஆசிரியைகளான திருமதி சுகுந்தன் மற்றும் செல்வி ஜுமைலா ஜமால்தீன் ஆகியோர் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்கள். வடக்குமாகாண கல்வியமைச்சின் உயர் அதிகாரிகள் , யாழ் முஸ்லீம் சமூகப் பிரதிநிதிகள், உலமாக்கள், பெற்றோர்கள் , மாணவர்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
WP_20160728_11_31_23_Pro
WP_20160728_13_25_41_Pro

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com