மெராயா ஊவாக்கலை தோட்டத்தின் வெள்ளிமலை பிரிவுக்கு செல்லும் 5 கிலோ மீற்றர் காபெட் வீதி – அடிக்கல் நாட்டுவிழா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினதும் வழிகாட்டலின் ஒன்றினைக்கபட்ட கிராமிய பாதைகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட மெராயா ஊவாக்கலை தோட்டத்தின் வெள்ளிமலை பிரிவுக்கு செல்லும் 5 கிலோ மீற்றர் பாதையை காபெட் கொண்ட பாதையாக அமைப்பதற்கு 23.07.2016 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், ஆர்.ராஜாராம், எம்.உதயகுமார், அமைச்சின் இணைப்பு செயலாளர் ஜீ.நகுலேஸ்வரன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ. புத்திரசிகாமணி என பலரும் கலந்து கொண்டு பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்ததோடு, பாதை புனரமைப்புக்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தனர்.IMG_5478 (1) IMG_5478 (2) IMG_5478 (3) IMG_5478 (4) IMG_5478 (5) IMG_7801 IMG_7812 IMG_7845 IMG_7852

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com