தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறந்து வைப்பு..

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேனை சிங்கள மகா வித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூடம் உத்தியோகபூர்வமாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவினால் 10.07.2016 அன்று திறந்து வைக்கப்பட்டு பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் மாணவர்கள் மத்தியில் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்தும் வகையில் ஆய்வுகூடத்தில் சகல வசதிகளும் கொண்டுள்ளது. சுமார் 60 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

இந்நிகழ்வில் அட்டன் வலய கல்வி பணிப்பாளர் பி.ஸ்ரீதரன், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.DSC02178 DSC02182 DSC02187 DSC02213

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com