பிரபாகரனின் கைவிரல் அடையாளத்தை ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க பார்வையிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் பொலிஸ் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘பொலிஸ் நெத’ புகைப்படகண்காட்சியில் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடையது என காட்சிப்படுத்தப்பட்டுள்ள கைவிரல் அடையாளத்தை யாழ்ப்பாணம் வருகைதந்துள்ள  ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க பார்வையிட்டுள்ளார்.

அமைச்சருடன் யாழப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஊடகத்துறை பிரதி அமைச்சரும் தென்னிலங்கை ஊடகவியலாளர்களும் பிரபாகரனுடையது என கூறப்படும் கைவிரல் அடையாளத்தை பார்வையிட்டுள்ளார்.

பொலிஸ் யாழ்ப்பாண பிரிவு மற்றும் குற்றப்பதிவு திணைக்கள புகைப்படக்கூடம் என்பன இணைந்து இக்கண்காட்சியை 26இ 27இ 28ஆம் திகதிகளில் யாழ். பொதுநூலகத்தில் நடத்துகின்றன.

இக்கண்காட்சியில் 156க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

இக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பிரபாகரனுடையது என கூறப்படும் கைவிரல் அடையாளத்தின் அருகில் ”

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 1996ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி கொழும்பு மத்திய வங்கி குண்டு வெடிப்பு சம்பவத்தில் பிரதான சந்தேக நபரான இனங்காணப்பட்டிருந்தார். 

இத்தாக்குதல் சூத்திரதாரிக்கு பிரபாகரன் மூலம் வழங்கப்பட்ட அடையாளச்சின்னத்தில் பிரபாகரனின் கைவிரல் அடையாளம் பதியப்பட்டிருந்தது.  1985ஆம் ஆண்டு இந்தியா தமிழ்நாட்டில் உமாஹேஸ்வரன் வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டு பொலிஸாரால் பிரபாகரன் கைது செய்யப்பட்ட நேரத்தில் பெறப்பட்ட கைவிரல் அடையாளம் மத்திய வங்கி குண்டு வெடிப்பின் போது பெறப்பட்ட சான்றுப்பொருள் ஒன்றுடன் தொடர்புபட்டிருந்தது.” 

எனும் வாசகம் தமிழிலும் சிங்களத்திலும் எழுதப்பபட்டிருந்தது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com