நவநாகரீக நிலைப்பாட்டிலிருந்து நாம் சிந்திக்க வேண்டும் – முதலமைச்சரைச் சாடினார் மீள்குடியேற்ற அமைச்சர்

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 700 ஏக்கர் காணிகள் மற்றும் நடேஸ்வராக் கல்லூரி, நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயம் ஆகியன   ஜனாதிபதி அவர்களால் பொதுமக்களிடம் மீளக் கையளிக்கும் நிகழ்வு  காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் 12.03.2016 சனிக்கிழமை நடைபெற்றபோது அங்கு உரைநிகழ்த்தின வடக்கு முதலமைச்சரும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். 

முன்னதாக வரவேற்புரை நிகழ்த்திய முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்,

சுவாமிநாதன் தவறாக எண்ணினாலும் பிரச்சகையில்லை. இந்த வீடுகள் எமது மக்களிற்குப் பொருத்தமானவையல்ல எங்கள் சுற்றாடல், காலநிலை, கலாசாரம் வாழ்க்கைமுறை என்பவற்றிற்குப் பொருத்தமானவையாக இல்லை. அத்துடன் மக்களுக்கு வழங்கப்படும் சில வசதிகள் குறிப்பாக காஸ் வசதிகளை மக்கள் தொடர்ந்தும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.’ எனத் தனது கருத்துக்களை கடும்தொனியில் ஆங்கிலத்தில் கூறிவிட்டு வடக்கு முதல்வர் அமர

எழுந்துவந்து முதலமைச்சர் ஆங்கிலத்தின் கூறியமையதல் தமிழில் உரையாற்றாதது நானும் அவருக்கு ஆங்கிலத்தில் விளக்கம் அளிக்கிறேன் எனத் தெடங்கினார் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்,

குறித்த வீடுகள் காலநிலைக்கு பொருத்தமானவையாக இல்லை என முதலமைச்சர் கூறுவதை ஒத்துக் கொள்ள முடியாது. காரணம் வெளியில் இருக்கும் காலநிலையை உதாரணமாக வெப்பத்தை எடுத்துக் கொண்டால் வெளியில் வெப்பம் அதிகமாக இருக்கும் போது உள்ளே வெப்பம் மிக குறைவாக இருக்கும் வகையில் அந்த வீடுகள் அமைக்கப்படுகின்றன.

வசதிகள் குறித்து முதலமைச்சர் இங்கே கூறினார். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் இவ்வாறான நவீனத்துவங்களை பின்பற்றியே வளர்ச்சியடைந்தன. தவிர இந்த வீடுகளை அமைக்கும் நிறுவனம் உலகளவில் தேர்ச்சி பெற்றதுடன் முன்னணி வகிக்கும் நிறுவனமாகும். நாங்கள் நாட்டினை நவீனமயப்படுத்துவதாயின் நவநாகரீக நிலைப்பாட்டிலிருந்து நாம் சிந்திக்க வேண்டும் என உரையாற்றிச் சென்றார்.

இருவரையும் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 

முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனும் வீட்டுத்திட்டம் தொடர்பாக தங்கள் கருத்துக்களைக் கூறினார்கள். அவர்களுடைய விவாதம் தேவையற்றது. இந்தவீடுகளில் நானோ, விக்கினேஸ்வரனோ, சுவாமிநாதனோ தங்கப்போவதில்லை. இவ் வீடுகளில் மக்களே தங்கப்போகின்றார்கள். மக்கள் விரும்பும் வீடுகளையே நாம் கட்டிக்கொடுக்கவேண்டும்.
மாகாண அரசுடன் இணைந்து வீட்டுத்திட்டம் தெடர்பாக விரைவில் மக்களின் கருத்துக்களைப் பெற்று அவைபற்றி நாங்கள் ஆராய்வோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com