இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்கிறது – இரண்டு மாதத்துள் 64 பேர் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 64 பேர், கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் மாத்திரம் கைது செய்யப்பட்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

அத்துடன் தற்சமயம் இந்திய மீனவர்களின் 86 படகுகள் இலங்கை அதிகாரிகளின் பொறுப்பில் இருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார். 

கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் கடற்றொழில் கூட்டுறவுச் சங்க பிரதிநிதிகளை சந்தித்த அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைக் கூறியுள்ளார். 

அதேபோன்று இந்திய கடற்பரப்பில் அத்துமிறி மீன்பிடியில் ஈடுபட்ட 09 இலங்கை மீனவர்கள் அந்த நாட்டு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 12 படகுகளும் கைப்பற்றப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார். 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டாலும், அவர்களின் படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் எந்த வகையிலும் விடுவிக்கப்பட மாட்டாது என்று அமைச்சர் கூறினார். 

சட்டமுறைப்படி அவற்றை அரசுடமையாக்கும் நடவடிக்கைகள் எடுப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com