பாகிஸ்தான் பிரதமர் இலங்கை விஜயம்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊத்தியோகபூர்வ விஜயமாக திங்கட்கிழமை (04) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தார். அவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமரசிங்க வரவேற்றார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பிணை ஏற்று நாட்டை வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமர் நாளை மறுதினம் புதன்கிழமை வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள் சிலரை சந்தித்து பாகிஸ்தான் பிரதமர் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார் எனவும்,
சுகாதாரம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்,  வர்த்தகம், புள்ளிவிபரவியல், மாணிக்ககல் மற்றும் தங்காபரணங்கள், நிதி மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குதல்,  கலாசாரம் , ஆகிய விடயங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கு இடையில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும்  வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com