ஜனாதிபதி பிரதமருக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்.

தேசிய தைப்பொங்கல் விழாவில் கலந்து கொள்ள யாழ்ப்பாணம் வரவுள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புகொடி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , 
இலங்கையிலே ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டு புதிதாக ஐனாதிபதியாகப் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன அவர்களது தலைமையில் அமைக்கப்பட்ட நல்லாட்சி எனப்படும் ஆட்சி காலமும்  தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே கொடுத்திருக்கின்றது.
கடந்த காலங்களில் முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவின் காலத்தில் இருந்த அச்சம் பெயரளவிலே அல்லது ஓரளவில் குறைந்த சூழ் நிலையை உணர்ந்தததைத் தவிர தமிழ் மக்கள் எதனையும் பெறிவ்லலை. 
தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. 
குறிப்பாக அரசியல் கைதிகளுடைய விடுதலையை சரியாக நிறைவேற்றவில்லை. காணாமல் போனவர் விவகாரத்தில் தீர்வை முன்வைக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணியை விடுவிக்கவில்லை. மேலதிகமான பல முக்கிய பிரச்சனைகளை தீர்க்காத அதே நேரத்தில் அவற்றை மறைப்பதற்கான நடவடிக்கைகளையே இந்த அரசாங்கமும் மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் மக்களுடைய எதிர்ப்பை காட்டும் முகமாக் ஐனவரி 15 ஆம் திகதி நடைபெறும்; பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தரவுள்ள ஐனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர்களுக்கு எதிராக ஐனவரி 13 ஆம் திகதி கறுப்புக் கொடி போராட்டங்களை நடத்துவது தொடர்பில் பல கட்சிகளுடனும் கலந்துரையாடி வருகின்றோம். 
இது தொடர்பில் கலந்தாலோசிதத்தன் பின்னர் இதன் இறுதி முடிவு தொடர்பில் சில தினங்களில் நாங்கள் வெளியிடுவோம்.
இந்த அரசாங்கமும் தமிழ் மக்களை வஞ்சிக்கின்ற வகையில் செயற்பட்டு வருகின்றது. அதற்கு எதிராக எங்களுடைய எதிர்ப்புகளை நாங்கள் காட்ட வேண்டும். இவ்வாறு காட்டாது விட்டால் இந்த அரசாங்கத்தாலும் தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக ஏமாற்றப்படுவதைத் தடுக்க முடியாது. 
எனவே ஏமாற்றப்படுவதனைத் தடுக்கும் முகமாக எங்களுடைய ஒன்றுபட்ட எதிர்ப்பை இந்த நாட்டின் ஐனாதிபதிக்கும்;, பிரதமருக்கும்;தலைவர்களுக்கும் அதே நேரம் உலகத்திற்கும் நாங்கள் தெரிவிக்க வேண்டிய  கடமையும் கட்டாயமும் இருக்கின்றது. இந்தக் கடமையை நாங்கள் செய்ய வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com