காணாமல் போனவர்களில் பலர் இறந்திருக்க கூடும் – பிரதமர் ரணில் யாழில் தெரிவிப்பு

காணாமல் போனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்தபோது காணாமல் போனவர்களில் பலர் இரற்து விட்டதாகவே உணரவேண்டியுள்ளது அது குறித்து நான் கவலையடைகின்றேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் தனது பாரியாருடன் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
அங்கு உரையாற்றிய அவர்,
காணாமல் போனவர்களின் பிரச்சினை
காணாமல் போனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்தபோது காணாமல் போனவர்களில் பலர் இரற்து விட்டதாகவே உணரவேண்டியுள்ளது அது குறித்து நான் கவலையடைகின்றேன். இப் பிரச்சனை தொடர்பாக விரைவில் கிளிநொச்சியில் அமர்வுஒன்று நடைபெற ஏற்பாடு செய்வேன். 
அரசியல் அமைப்பு சபை உருவாக்கம்
அரசியல் அமைப்பை திருத்த  நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் உள்வாங்கி அரசியல அமைப்பு சபையை உருவாக்க ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அவர்கள் வெளிப்படையாக செயற்பட வேண்டும். 18ஆவது சீர்திருத்தத்தை பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ஏனையவர்கள் சர்வாதிகாரமாக உருவாக்கியதை போல செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம். இவர்கள், மாகாண சபையுடனும் பேசிஅவர்களுடைய கருத்துகளை அறிய வேண்டும். பொதுமக்களின் கருத்துகளும் பெறவேண்டும். அரசியல் அமைப்பு என்று ஒன்று இல்லை. அவை மக்களின் கருத்தில் இருந்தே உருவாக்கப்பட வேண்டும். 

ஊடகங்கள் அடிவருடிகளாக செயற்படக் கூடாது
சர்வாதிகாரமாக செயற்பட்டவர்கள், தோல்வியடைந்த பின்னால் தான் வெளிப்படை பற்றி தற்போது குழறத் தொடங்கியுள்ளனர். மீண்டும் அதனை குழப்ப வேண்டாம் என்று, சர்வாதிகாரமாக 18ஆவது சீர்த்திருத்தத்தை உருவாக்கிய ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ஏனையவர்களுக்கு வக்காலத்து வாங்கிய ஊடகத்துக்கு சொல்கின்றேன். வடக்கு மற்றும் தெற்கு ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட போது வக்காலத்து வாங்கிய ஊடகங்கள் இன்றைய சூரிய உதயத்தின் பின்னராவது மாற வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

உடனடி படைக்குறைப்பு சாத்தியமில்லை
தற்போது யாழில் சட்டரீதியான படையினரே உள்ளனர். இங்கு அளவிற்கு அதிகமாக இல்லை. முன்னர்  இந்தியப் படையைனரை  வெளிறேற்றிவிட்டடோம் தற்போது புலிகளையும் அகற்றிவிட்டோம்.  இராணுவத்தில் ஓய்வு பெறும் நிலையில் பெருமளவான இராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்கள் ஓய்வு பெற்று சமூக நீரோட்டத்துக்கு செல்லும்போது அவர்களுக்கு பயிற்சி அளித்து சமூகத்தில் இணைக்கப்படுவார்கள். அப்போது இரணுவம் வடக்கில் தானாக குறையும். இராணுவத் தளபதியுடனும் பேசியுள்ளேன் தேவைப்பட்டால் காலப்போக்கில் இங்குள்ள படையினரை வேறு பிரதேசங்களிற்கு மாற்றுவோம்.

இராணுவத்திற்கு இரகசிய பயிற்சி 
தற்போது மூன்று படைபிரிவினருக்கு பயிற்சியளித்துவருகின்றோம். இது இரகசாயம் காக்கப்பட்ட தகவல். மாலி நாட்டுக்கு யுத்தத்துக்கு அனுப்புவதற்காகவே அவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டால் சர்வதேச நாடுகளின் அமைதி  நடவடிக்கையில் இலங்கை படையினராயும் ஈடுபடுத்த முடியும். 

மாணவர் படையணி
இனி வரும் காலங்களில் இளம் மாணவர் படையணியை உருவாக்குவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ருவன் விஜயவர்தன மற்றும் இராணுவ தளபதியிடம் பேசியுள்ளேன். காலப்போக்கில் தமிழர்களையும் அதிகளவில் உள்வாங்குவதான இலங்கையர்கள் அனைவரையும் உள்ளடக்கிய தேசிய இராணுவத்தை உருவாக்குவோம். தற்போது அதில் சில குறைபாடுகள் இருப்பது உண்மை.

இந்திய மீனவர்களின் அத்து மீறல் பிரச்சினை முற்றாக ஒழியும் வரை கடற்படையினரின் தொகை குறைக்க முடியாது  இலங்கையின் கடற்பகுதி மற்றும் நிலப்பகுதியை இலங்கையின் முப்படையினரால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதை 2002ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் விடுதலை புலிகள் உட்பட அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்  எனவும் பிரதமர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com