எனது வாக்குகளைக் களவாடியவர்கள் எம்மை தோற்றவர்கள் என்கிறார்கள் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

வடக்கு மாகாண சபையில் ஐந்து உறுப்பினர்களையும் இருவரை பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் கொண்டுள்ள கட்சி எவ்வாறு தோற்றுப்போன கட்சி ஆக முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ள  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தான் தோல்வியடைந்திருந்தபோதும் தன்னை திட்டமிட்டு தோற்கடிக்க யார் யார் ஒன்றிணைந்து தனது வாக்குகளை களவாடி எவர் எவருக்கு பகிர்ந்து கொடுத்தார்கள் எனபது பற்றி எல்லாம் தனக்கு தெரியும் எனவும் இப்பொழுது இதனை தான் சொன்னால் நீதிமன்றம் சென்று நீதியை பெற்றுக்கொள்ளுங்கள் என கூறுவார்கள். இதற்கு நீதி கிடைப்பதற்குள் இரண்டு பாராளுமன்ற தேர்தல்கள் நடந்து முடிந்து விடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர் மேலம் தெரிவிக்கையில்

தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டத்திற்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த சிலர் ஏற்கவில்லை.

காலாவதியான குற்றங்களை கிளறி சேறடிப்பது ஆரோக்கியமான விடயம் அல்ல, அவை வேண்டும் என்றே சில ஊடகங்கள் செய்கின்றன, ஊடகங்கள் தற்போதைய நடைமுறை பிரச்சனைகளை மக்களுக்கு தெளிவு படுத்தாமல் காலவதியான விடயங்களை கிளறி சேறடிப்பு செய்ய கூடாது. ஈ.பி,ஆர்.எல்,எப். தீர்வுத்திட்டம் தயாரிப்பதற்காக பொதுமக்கள் , சிவில் சமூகம் , புலம் பெயர் உறவுகளிடம் இருந்து ஆலோசனைகளை பெற்றதே அதற்கு என்ன நடந்தது என கேட்பவர்களுக்கு எனது பதில், எமக்கு வந்த ஆலோசனைகளின் பிரகாரம் தீர்வு திட்ட வரைவை தயாரித்தோம் அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சிலர் அந்த நேரம் அதனை ஏற்காததால் அது வெறும் ஆலோசனைகளாகவே இருக்கின்றன. 
அதனை நாம் தற்போது தமிழ் மக்கள் பேரவையிடம் கையளிக்க உள்ளோம். அவர்கள் எமது ஆலோசனைகளை தாம் தயாரிக்கும் தீர்வு திட்ட வரைவில் உள்வாங்குவார்கள் என எதிர்பார்க்கின்றேன். எம்மை தோற்று போனவர்கள் என்கிறார்கள். தோல்வி எமக்கு புதிதல்ல, நாம் முன்னரும் தோல்வி யடைந்துள்ளோம், அதற்காக நாம் ஓடி ஒழிய மாட்டோம். தோற்றாலும் மக்களோடு நாம் நிற்போம். எமது தோல்வி ஆயுத குழுக்களின் தோல்வி ஆயுத குழுக்களை மக்கள் நிராகரித்து விட்டார்கள் என சிலர் பிரச்சாரம் செய்கின்றார்கள். அதனை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எமது ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் போட்டியிட்டு இருவர் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர். 
அதேபோன்று வடமாகாண சபையில் ஐந்து உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். யாழில் போட்டியிட்ட நான் தோல்வி அடைந்தேன். இருந்தாலும் நான் 30 ஆயிரம் வாக்குகள் பெற்றேன். என்னை திட்டமிட்டு தோற்கடிக்க யார் யார் ஒன்றிணைந்து எனது வாக்குகளை களவாடி எவர் எவருக்கு பகிர்ந்து கொடுத்தார்கள் எனபது பற்றி எல்லாம் எனக்கு தெரியும். இப்பொழுது இதனை நான் சொன்னால் நீதிமன்றம் சென்று நீதியை பெற்றுக்கொள்ளுங்கள் என கூறுவார்கள். இதற்கு நீதி கிடைப்பதற்குள் இரண்டு பாராளுமன்ற தேர்தல்கள் நடந்து முடிந்து விடும்.
 நீதியை பெறவுதற்காக என பெருமளவு பணத்தை செலவளித்து எனது வீட்டை விற்கும் அளவுக்கு நான் போக தயாராக இல்லை. நாங்கள் கதிரை மேல் ஆசைப்பட்டு வந்தவர்கள் அல்ல, தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி பல போராட்டங்களுக்கு மத்தியில், பல இன்னல்களை சந்தித்து அரசியலுக்கு வந்தவர்கள். எவருக்கும் கொடி பிடித்து வாழவேண்டிய தேவை எமக்கு இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com