எனது மகளை விட்டுவிடுங்கள் – ரம்பிராசா பகிரங்க வேண்டுகோள்

கடந்த 23ஆம் திகதி பிற்பகல் தனது அலுவலகத்திலிருந்தபோது காணாமல்போன தனது மகன் குறித்த எந்தத் தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுள் ஒருவரான தம்பிராசா 19 வயது நிரம்பிய அப்பாவி மாணவனான தனது புதல்வனை கடத்தியவர்கள் அவனை விட்டுடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது மகன் காணாமல் போன விவகாரம் தொடர்பான யாழ் ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (28.07.2015) ஊடக சந்திப்பொன்றினை மேங்கொண்ட அவர் தனது மகனை பாதுகாப்பாக மீட்டு தருமாறு பகிரங்க வேண்டுகோளை விடுத்திருந்தார்.

தனது மகன் பாடசாலை மாணவன் எனவும் சம்பவ தினம் யாழ் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தனது கட்சி அலுவலகத்தில் மகனைத் தங்கவைத்து விட்டு கூட்டமைப்பு வேட்பாளர் சிறீகாந்தாவுடனான சந்திப்பிற்கென சென்றிருந்ததாகவும் பின்னர் திரும்பி வந்திருந்த நிலையினில் மகனை காணவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

தனது மகன் காணாமல் போயுள்ளமை தொடர்பினில் ஜனாதிபதி முதல் வடக்கு முதலமைச்சர் வரை அறிவித்துள்ள போதும் இன்றுவரை தகவலற்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.

தம்பிராசா கடந்த மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பு சார்பினில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com