2009 இலங்கை வந்தபோது சொன்னவற்றை பான் கீ மூன் செய்யவில்லை – வடக்கு மாகாண முதலமைச்சர்

06 யுத்தம் முடிந்து ஏழு அண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்தவுடன் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் செய்து கொண்ட உடன்பாட்டின்படி நடந்துகொள்ளவில்லை என்பதை சுட்டிக்காட்டியதோடு நீதியான சர்வதேச விசாரணை ஒன்றே தற்போதய நல்லிணக்கத்திற்கு அவசியமானது எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான வடக்கு மாகாண அமைச்சர்கள் குழு பான்கீ மூனிடம் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை (02) மாலை யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்து உரையாடினர்.

முன்னதாக வடக்கு முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் இணைந்து சந்திப்புக்களை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டடிருந்தது. எனினும் வடக்கு முதலமைச்சர் தலமையிலான அமைச்சர்களை பான் கீ மூன் தனியாக சுமார் 10 நிமிடங்கள் வரை சந்தித்திருந்தார்.

இதன்போது போர்க்குற்றச் செயல்களுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியதோடு நில ஆக்கிரமிப்பு, பௌத்த மயமாக்கல், காணாமல் போனவர்களது விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

பான் கீ மூனுடனான சந்திப்பிற்கு மிகக் குறுக்கிய நேரமே ஒதுக்கப்படும் என முன்னரே அறிந்திருந்ததால் பெரும்பாலான விடையங்களை அறிக்கை வடிவில் முன்கூட்டியே தயாரித்து வைத்திருந்ததாகவும் அவற்றை பான் கீ மூனிடம் கையளித்ததாகவும் தெரிவித்த முதலமைச்சர் காணாமல்போனோர் 4000 பேரினது விபரங்கள் தொடர்பான நுல் வடிவிலான ஆவணம் ஒன்றும் தயாரிக்கப்பட்டு கையளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds