சற்று முன்
Home / செய்திகள் / 20 நாட்டு தூதுவர்கள் ரணிலுடன் திடீர் சந்திப்பு ! – சீனா தூதுவர் மகிந்தவுடன் சந்திப்பு

20 நாட்டு தூதுவர்கள் ரணிலுடன் திடீர் சந்திப்பு ! – சீனா தூதுவர் மகிந்தவுடன் சந்திப்பு


ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து விளக்கமளித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில், அமெரிக்கா, இந்தியா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா, ஜப்பான், கனடா, உள்ளிட்ட 20 நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க மற்றும் சாலக ரத்நாயக்க ஆகியோர் விளக்கமளித்துள்ளனர்.

இதன் போது அரசியலமைப்பு ரீதியாக தானே பிரதமராக இருப்பதாக, ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் தமக்கு இருப்பதாகவும், அதனால் தான் தாம் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று சிறிலங்கா அதிபரிடம் திரும்பத் திரும்ப கேட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தச் சந்திப்பில் சீனத் தூதுவர் சென் ஷிய யுவான் பங்கேற்கவில்லை என்பதும், அவர் மகிந்த ராஜபக்சவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன் போது, சீன அரசாங்கத்தின் வாழ்த்துச் செய்தியை அவர் மகிந்த ராஜபக்சவிடம் கையளித்துள்ளார்.

நேற்று மாலை மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலாவது வெளிநாட்டுத் தூதுவர் இவராவார்.

 

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com