20 ஆவது திருத்தத்தால் ஈ.பி.ஆர்.எல்.எவ் இற்குள் பிளவா ?

 

மாகாண சபைகள் தொடர்பில் கொண்டுவரப்படும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிக்குள் பிளவு நிலை தோன்றியிருப்பதாக கூறப்படுகின்றது.
அஅண்மையில் ஊடகசந்திப்பு ஒன்றை நடத்திய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகின ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரிக்க தமிழரசு கட்சியினர் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை ஈ.பி.ஆர்.எல்.எவ் வன்மையாக கண்டிக்கின்றது எனவும், தமிழரசு கட்சியின் இத்தகைய தீர்மானம் தமிழ் மக்களை நிச்சயமாக படுகுழிக்குள் தள்ளுவதாகவே அமையும் எனவும் தெரிவித்ததுடன், ஆதரிக்க எடுத்த முடிவு தமிழரசுக் கட்சியின் தனிப்பட்ட முடிவு எனக் கூறி ஈ.பி.ஆர்.எல்.எப் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிராகரிக்கிறது எனத் தெரிவித்திருந்தார்.
எனினும் கிழக்கு மாகாணசபையில் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டிருந்தது. இதன்போது, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், மத்தியகுழு உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரட்ணம், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கி அதனை நிறைவேற்றுவதற்கு உதவியிருந்தார்.
இதேவேளை, கிழக்கு மாகாணசபையில், ஈ.பி.ஆர்.எல்.எப் தவிர்ந்த வேறு சில உறுப்பினர்கள் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து இருந்தனர். ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எப் அதற்கு ஆதரவு வழங்கியிருந்தது.
இந்நிலையில் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிக்குள் முரண்நிலை தோன்றியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com