2 பேருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பு

nuwara_court_002இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராகலை மெதவத்த பகுதியில் 1995ஆம் ஆண்டு 01 மாதம் 26ம் திகதி இடம்பெற்ற ஒருவரின் கொலையுடன் தொடா்புடைய 2 பேருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி ஆச்சாரி சுமுது பிரேமசந்திர 30.06.2016 அன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

1995ஆம் ஆண்டிலிருந்து தொடா்ந்து நடத்திய விசாரணைகளின் பின்னரே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த கொலையுடன் தொடர்புடைய 2 பேர் குற்றவாளிகளாக இனம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த கொலையுடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்களான இராகலை மெதவத்த பகுதியை சேர்ந்த அசோக பத்திரண, விசோகுமாரி விக்கிரமசிங்க ஆகிய இரண்டு பேருக்கும் 6 மாதம் கடுங்காவல் சிறைதண்டனையுடன், மரண தண்டனை வழங்கி தீர்பளிக்கப்பட்டது.

மேற்படி சந்தேக நபா்கள் மெதவத்த பகுதியில் உள்ள சோமசிறி என்பவரை தனிப்பட்ட பிரச்சினை காரணமாக கொலை செய்துள்ளனர். இதனாலேயே இரண்டு சந்தேக நபா்களுக்கு 6 மாதம் கடுங்காவல் சிறைதண்டனையுடன், மரணதண்டனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலைசெய்யப்பட்ட சோமசிறி என்பவர் மரண தண்டனை விதிக்கப்பட்ட விசோகுமாரி விக்கிரமசிங்கவின் தந்தை என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com