சற்று முன்
Home / பிரதான செய்திகள் / 196 ஆசனங்களிற்கு நாடுழுமுவதும் ஆறு ஆயிரத்து 151 பேர் போட்டி

196 ஆசனங்களிற்கு நாடுழுமுவதும் ஆறு ஆயிரத்து 151 பேர் போட்டி

(16.08.2015) இலங்கையின் எட்டாவது பாராளுமன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 6,151 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் யாரைத் தெரிவு செய்வது என்ற தீர்ப்பை மக்கள் நாளை வழங்கவுள்ளனர்.

சுயாதீனமானதும் நீதியானதுமான தேர்த லை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுக ளும் நிறைவடைந்துள்ளதாகவும் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையில் மக்கள் வாக்களிக்க முடியுமெனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.

225 பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களில் 196 பிரதிநிதித்துவங்களை நேரடியாகத் தெரிவு செய்வதற்காக 6 ஆயிரத்து 151 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில் 2014 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் பிரகாரம் ஒரு கோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 490 வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 12ஆயிரத்து 314 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆயிரத்து 600 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேவேளை நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சத்து 95 ஆயிரம் அரச ஊழியர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ளதோடு 75 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 80 பேரும் தெற்காசிய தேர்தல்கள் முகாமையாளர்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த 29 பேரும் ஆசிய தேர்தல்கள் அதிகாரிகள் ஒன்றியத்தைச் சேர்ந்த 3 பேரும் பொதுநலவாய அமைப்பைச் சேர்ந்த 15 பேரும் ஈடுபடவுள்ளனர்.

அதேவேளை உள்நாட்டைச் சேர்ந்த சுயாதீன தேர்தல் அமைப்புக்களான கபே, பவ்ரல், டிரான்ஸ்பரன்ஸி உட்பட பல்வேறு அமைப்புக்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளன.

நாளை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 196 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளதுடன் கட்சிகள் பெறுகின்ற வாக்குகளின் அடிப்படையில் தேசியப்பட்டியல் மூலம் 29 உறுப்பினர்களும் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படுவார்கள். அதனடிப்படையில் 225 பேர் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி ஆற்றிய உரை !

பயங்கரவாதம் என்பது, உலகளாவிய அச்சுறுத்தல் என்பதோடு, அதனை வெற்றிகொள்ள வேண்டுமாயின், விசேடமாகப் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு, ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com