சற்று முன்
Home / செய்திகள் / 19 இல் திருத்தத்திற்குத் தயாராகும் மைத்திரி

19 இல் திருத்தத்திற்குத் தயாராகும் மைத்திரி

19ஆவது திருத்தச்சட்டத்தில் ஏதேனும் நடைமுறை ரீதியிலான குறைபாடுகள் காணப்பட்டால், பாராளுமன்ற நடைமுறைக்கமைய திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராக இருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு நேற்று மாலை அறிவித்தது.

இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2015 ஜனவரி 08 ஆம் திகதி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவரது தலைமையில் மூன்று தசாப்த காலமாக நாட்டில் ஜனநாயகம் தொடர்பில் நிலவிய சிக்கல் நிலைமைக்கு தீர்வாக, இலங்கை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் திருத்தச் சட்டத்தின் ஊடாகவே சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டமை, ஜனநாயக ரீதியிலான நிறுவனக் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டமை உள்ளிட்ட சாதகமான பெறுபேறுகளை எமது சமூகம் பெற்றுக்கொண்டுள்ளது.

அவை எமது நாட்டில் ஜனநாயகத்தை மதிக்கும் மக்கள் பெற்றுக்கொண்ட உண்மையான வெற்றியாக அமையும் அதேவேளை, தாய் நாட்டின் நவீன யுகத்தை நோக்கிய பயணத்திற்கும் இன்றியமையாததாகும்.

எனவே, 19ஆவது திருத்தச்சட்டத்தில் ஏதேனும் நடைமுறை ரீதியிலான குறைபாடுகள் காணப்படுமாயின் இலங்கை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தின் கருப்பொருள் மற்றும் அதனூடாக ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக ரீதியிலான விடயங்களை பாதுகாத்து, பலப்படுத்தி அரசியல் ரீதியில் பிரச்சினைக்குரிய விடயங்களுக்கான திருத்தங்களை பாராளுமன்ற நடைமுறைக்கமைய மேற்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அர்ப்பணிப்புடன் இருக்கின்றார் என வலியுறுத்தப்படுகின்றது என்றும் அந்த ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com