சற்று முன்
Home / செய்திகள் / 150 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து

150 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை நகரிற்கு அண்மித்த பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று 15.12.2016 அன்று மாலை 6.00 மணியளவில் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த 04 பேர் படுங்காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் மேலதிக சிகிச்சைக்காக மூன்று பேர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

லிந்துலை பாமஸ்ட்டன் பகுதியிலிருந்து லிந்துலை வைத்தியசாலைக்கு மருந்தெடுப்பதற்காக வருகை தந்து கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் இரண்டு பெண்களும் 18 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவரும் சாரதியுமே காயமடைந்துள்ளனர்.

இவர்களில் இரண்டு பெண்களும் 18 வயது இளைஞனும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டள்ளனர்.

சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com