சற்று முன்
Home / செய்திகள் / 15 பேர்கொண்ட வடமாகாண பட்டதாரிகள் குழுவுடன் வடமாகாண சபை சிறப்புக் குழு நியமனங்கள் குறித்து ஆராய்வு

15 பேர்கொண்ட வடமாகாண பட்டதாரிகள் குழுவுடன் வடமாகாண சபை சிறப்புக் குழு நியமனங்கள் குறித்து ஆராய்வு


(23.09.2015) தமக்கான வேலைவாய்ப்புக்களைக் கோரி கடந்த ஜனவரியில் இருந்து தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் முன்னர் பல வாக்குறுதிகள் வடக்குமாகாணசபையால் வழங்கப்பட்டபோதும் அவை எவற்றையும் மாகாணசபை செயற்படுத்தாததால் உடனடியாக தமது நியமனங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்ட வேண்டும் எனக் கோரி வடக்கு மாகாண பட்டதாரிகள் வடக்கு மாகாணசபையின் முன் போராட்டம் ஒன்றினை நேற்று (22) மேற்கொண்டிருந்த  நிலையில் அவர்களின் கோரிக்கைகளை ஏற்ற மாகாணசபை உடனடியாக அவையில் சிறப்புத் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியதோடு பட்டதாரிகள் அமைச்சர்கள் சபைஉ றுப்பினர்களை உள்ளகிக்கியதாக சிறப்பு செயற்குழு ஒன்றினையும் அமைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

அதன்பொருட்டு உடனடியாகநேற்று மாலையே (22) வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், அமைச்சர்களான டெனீஸ்வரன், சத்தியலிங்கம் மற்றும் உறுப்பினர்களான சர்வேஸ்வரா, அன்ரனி, அஸ்மின் மற்றும் றிவ்கான் ஆகியோரை உள்ளடக்கிய குழுவும் வட மாகாண பட்டதாரிகள் சார்பாக 15 பேரை உள்ளடக்கிய குழுவினரும் அவசர கலந்துரையாடல் ஒன்றினை வட மாகாண சபையில் 5 மணியளவில் ஆரம்பித்தது. 
பேச்சுவார்தை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பட்டதாரிகளின்  ஊடகப் பேச்சாளர்,
பட்டதாரிகள் சமூகம் வேலைவாய்ப்பை பெற்றுக் கொள்ளுதல் மற்றும் ஏனையவர்களுக்கிடையில் தொடர்பாளர்களாக விளங்குதல் என்னும் அடிப்படையில் ஆரம்பமாகியது.
ஆரம்பத்தில் எமது இலக்கு, நோக்கம் குறித்து தனித்தனியாக கேட்டு அறிந்து கொண்டனர். பின்னர் மேற்கொண்ட கலந்துரையாடலின் அடிப்படையில் பின்வரும் முடிவுகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன…
1. எமக்கு முன்னிலையில் தொலைபேசி வாயிலாக அவைத் தலைவர் வடமாகாண பிரதம செயலாளர், ஆளுனரின் செயலாளர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு அவர்கள் கொழும்பு சென்று வரும் வெள்ளிக்கிழமை 496 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற் MSD அனுமதிக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை உறுதிப்படுத்தினார்.
2. அதே தினம் வடமாகாண அவைத் தலைவர் மற்றும் சில உறுப்பினர்கள் யாழ் மாவட்ட PSS, PSA ஆகியோருடன் சந்திப்பில் ஈடுபடல்.
3. இங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக மீண்டும் வரும் வியாழக்கிழமை 10.30 மணியளவில் எம்மைச் சந்திப்பது என்ற முடிவுகள் எட்டப்பட்டன. 
பின்னர் 7.15 மணியளவில் கலந்துரையாடல் முடிவுக்கு வந்தது என
தெரிவித்துள்ளார்.


About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com