யாழ்ப்பாணத்து ஊடகவியலாளருக்கு சிங்களத்தில் அழைப்பாணை!

சிங்கள மொழியே தெரியாத யாழ்ப்பாணத்து ஊடகவியலாளர் ஒருவருக்கு இலங்கை காவல்துறை சிங்கள மொழியில் அழைப்பாணைக் கடிதம் அனுப்பியுள்ளது.

கடந்த 12ஆம் நாள் காலை 9.30 மணியளவில் கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவு அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு ஆணையிடப்பட்டது.

வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பாக சுயாதீன ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனிடம் குற்ற புலனாய்வுத்துறை விசாரணை ஒன்றிணை நடத்தியுள்ளது. அவருக்கே இவ் ஆணைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த அழைப்பாணையானது அச்சுவேலி காவல்துறையினரின் இலட்சனையுடனே  அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கையில்  சிங்களம், தமிழ் ஆகிய மொழிகள் உத்தியோகபூர்வ மொழிகள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அச்சுவேலியைச் சேர்ந்த காவல்துறையினர், சிங்களமே தெரியாத தமிழ் ஊடகவியலாளருக்கு  சிங்கள மொழியில் அழைப்பாணை அனுப்பியது தற்போது மக்கள் மத்தியில் விசனத்தைத் தோற்றுவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com