இலங்கையின் 34 ஆவது பொலிஸ் மா அதிபராக பூஜித்த ஜெயசுந்தர

pujith-jayasundara-sltoday11இலங்கையின் 34 ஆவது பொலிஸ் மா அதிபராக பூஜித்த ஜெயசுந்தரவை நியமிக்க  பெரும்பாலான அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள்  இணக்கம் தெரிவித்துள்ள நிலையில்அவரின் பெயர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் தீர்மானிக்க, அரசியலமைப்புச் சபை இன்று பிற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் கூடியநிலையில் , அரசிலமைப்புச் சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் பூஜித்த ஜெயசுந்தரவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க இணக்கம் தெரிவித்திருந்தனர்.

 

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு புதியவரை நியமிக்கும் செயற்பாட்டில் ஜனாதிபதியால் பரிந்துரை செய்யப்பட்ட மூன்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களினதும் தகைமைகளை பரீட்சித்துப் பார்க்க அரசியலமைப்பு சபை தீர்மானித்ததன் அடிப்படையில் புதிய பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மூன்று பேருக்கும் பாராளுமன்ற அரசியலமைப்புச் சபை அழைப்பு விடுத்திருந்தது. அவ்வகையில் பிரதி பொலிஸ் மா அதிபர்களான சி.டி.விக்ரமரத்ன. பூஜித் ஜெயசுந்தர மற்றும் எஸ்.எம் விக்ரமசிங்க ஆகியோர். இன்று(18) பாராளுமன்றிற்கு சமூகளித்திருந்தனர்.

இலங்கையின் 34 ஆவது பொலிஸ் மா அதிபராக பூஜித்த ஜெயசுந்தர நாளையதினம் ஜனாதிபதியால் பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds