12 வயது சிறுவனுக்கு சித்திரவதை! இருவர் கைது!

கலஹா – தெல்தோட பகுதியில் சிறுவன் ஒருவனை சித்திரவதை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கலஹா பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட 12 வயதான சிறுவன், பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டு, தற்போது கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் சிறுவனின் சகோதாரன் உள்ளிட்ட இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இன்று கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com