வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான அவசர கலந்துரையாடல்.

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (12.02 2017) காலை 10.00 மணிக்கு நல்லூர் ஆலய முன்றலில் அவசர கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இதுவரை பட்டதாரிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதிருப்பதால் இக்கலந்துரையாடலில் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
எனவே வடமாகாணத்தினைச் சேர்ந்த பல்கலைக்கழக உள்வாரி, வெளிவாரிப் பட்டதாரிகளையும் உயர்தேசிய டிப்ளோமா பட்டதாரிகளையும் குறித்த நேரத்தில் தவறாது கலந்துகொள்ளுமாறு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் தலைவர் துஷாந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com