100 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்துகுள்ளாகியுள்ளது.

லிந்துலை லெமனியர் தோட்டத்திலிருந்து லிந்துலை நகரத்திற்கு சென்ற முச்சக்கரவண்டி ஒன்று தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை நகரத்திற்கருகாமையில் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துகுள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 04 பேர் பலத்தகாயங்களுடன். லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரனையை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மலையக பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.

அத்தோடு அக்கரப்பத்தனை, தலவாக்கலை, நுவரெலியா, நானுஓயா ஆகிய பிரதேசங்களில் அதிகமான பனிமூட்டம் காணப்படுவதால் வாகன விபத்துக்கள் அதிகமாக இடம்பெற வாய்ப்புகள் உள்ளதால் சாரதிகள் வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு லிந்துலை பொலிஸார் கோரியுள்ளனர்.20160827_142725 20160827_142803 20160827_143333

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com