10 லட்சம் இளைஞர்கள் தயாராகுங்கள்!’ – வைகோ திடீர் அழைப்பு

” செப்டம்பர் 30ம் தேதி என்பது தமிழினத்துக்கு துக்கநாள். தமிழர்களுக்கான நீதி சாகடிக்கப்படும் நாள். இதனால் நாம் தளர்ச்சியடைய தேவையில்லை. 10 லட்சம் இளைஞர்கள் தயாராகுங்கள். நமக்கான நீதியை நாமே தேர்வு செய்துகொள்வோம்” என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோவையில் கூறினார். 

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. “மனித உரிமை ஆணையர் நியமித்த மார்ட்டி அட்டிசாரி அடங்கிய மூவர் குழு தாக்கல் செய்த 268 பக்க அறிக்கை சிங்கள அரசு நடத்திய போரை தெரிவித்தது. அதில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், ஈவு இரக்கமற்றா படுகொலைகள், பட்டினி கொலைகள், மருந்தில்லா கொலைகள் என அத்தனையும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் இலங்கையைச் சேர்ந்த நீதிபதிகள், அவர்கள் தமிழர்களாக இருந்தால் கூட நீதி கிடைக்காது. எனவே பன்னாட்டு நீதிபதிகளை கொண்ட விசாரணை தேவை என வலியுறுத்தினோம். ஆனால் இப்போது அமெரிக்காவும், இந்தியாவும் சேர்ந்து கொண்டு ரணில் விக்ரமசிங்கே தயாரித்துக்கொடுத்த தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளது. வெளிநாட்டு நீதிபதிகள் விசாரிக்க எந்த முகாந்திரமும் இந்த தீர்மானத்தில் இல்லை. இலங்கையை வரவேற்றும், பாராட்டியுமே இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழர்களுக்கான நீதி சாகடிக்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் இந்தியா கபட நாடகம் ஆடுகிறது. அமெரிக்கா இலங்கையை பாராட்டிக் கொண்டு வரும் இந்த தீர்மானத்தை எதிர்க்காமல் நடுநிலை வகிக்கப்போவதாக இந்தியா கபடநாடகம் ஆடுகிறது. 2009ம் ஆண்டு மனித உரிமை கவுன்சிலில் எடுத்த அதே போன்ற முடிவை இப்போதும் எடுக்கிறார்கள். போர் குற்றத்தில் சம்பந்தப்பட்ட இலங்கைக்கு ஆதரவாக இருப்பதோடு, விடுதலை புலிகளை மட்டும் விசாரிக்க ஏற்பாடு நடந்து வருகிறது. புலம்பெயர்ந்த தமிழர்களையும், விடுதலை புலிகளுக்கு ஆதரவாக இருந்தவர்களையும் விசாரிக்க முன்னோட்டமாக இது அமைந்துள்ளது.

இதனால் தளர்ச்சியடைய தேவையில்லை. 10 லட்சம் இளைஞர்கள் தயாராகுங்கள். நியாயம் நம் பக்கம் இருக்கிறது. நான் ஆயுதம் ஏந்த சொல்லவில்லை. தமிழர்களுக்கான நீதியை நாமே தேடிக்கொள்ள வேண்டும். இந்த கூட்டுச்சதியில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. இத்தனை படுகொலை நடக்கவும், விடுதலை புலிகள் தேற்கடிக்கப்படவும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு யுத்தத்தை நடத்தியது. அந்த ஆட்சியில் பங்கேற்ற காங்கிரஸ், தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் இனப்படுகொலை நடக்க உடந்தையாக இருந்த குற்றவாளிகள் என நான் குற்றஞ்சாட்டுகிறேன். முத்துக்குமார் போன்ற 10 லட்சம் இளைஞர்கள் தயாராகுங்கள்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com