10 இலட்சம் பேருக்கு  தேசிய அடையாள அட்டை இல்லை

நாட்டின் மொத்த சனத்தொகையில் 10 இலட்சம் பேருக்கு  தேசிய அடையாள அட்டை இல்லை என, தேசிய ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார்.

தேசிய ஆட்பதிவு திணைக்களத்ததினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்களிடம் தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக  வேறு ஆவணங்கள் கிடையாது எனவும், இதில் 7 இலட்சம் பேர் வயோதிபர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தவகையில் குருநாகல் மாவட்டத்தில் மாத்திரம் 80,000 பேர் தேசிய அடையாள அட்டை அற்றவர்களாக காணப்படுவதாக அத்திணைக்களம் ​மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com