03 ஆவது ஆண்டில் தடம் பதிக்கிறது வாகீசம் இணையம்

அனைத்து வாசகர்களுக்கும் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள். “தமிழர் திருநாளில்” 03 ஆவது ஆண்டில் தடம்பதிக்கும் வாகீசத்தின் ஊடாக வாசக நெஞ்சங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இன்றைய தினம் வாகீசம் இணையம் பதிவு செய்யபட்டு உத்தியோகபூர்வமாக செய்தித் தளமாக பரணமித்த 02 ஆம் ஆண்டு நிறைவு நாளாகும்.
இற்றைக்கு ஏழு வருடங்களுக்கு முன்னர் தனியொரு கிராமத்தின் செய்திகளை புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் அறியப்பெறுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கிராமிய தளமாக “வாகீசம்” பரிணமித்தது. சில ஊடக நண்பர்களின் முயற்சியோடு வாகீசத்தை செய்தித் தளமாக பரவலடையச் செய்யவேண்டும் என்ற முயற்சி எடுக்கப்பட்டு அந்த முயற்சி வெற்றிநடை போட்டு இன்று 02 ஆண்டுகள் கடந்துள்ளது.

கிராமிய தளமாகவும், இலக்கிய தளமாகவும் செயற்பட்டுவந்த வாகீசம் இணையம் கடந்த 2016 ஆம் ஆண்டு தை மாதம் இலங்கை அமைச்சினால் பதிவுசெய்யப்பட்டு செய்தி இணையமாக தனது உத்தியோகபூர்வ பயணத்தை 14.01.2016 தமிழர் திருநாளாம் தைத் திருநாளில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பித்தது.

செய்தி இணையமாக பரிணாமம் பெற்று இன்று அதன்இரண்டாம் ஆண்டினைக் கொண்டாடும் வாகீசம் இணையம். யாழ்ப்பாத்திலிருந்து செய்திகளை வழங்கும் முன்னணி செய்தி இணையமான வளர்ச்சியடைந்துள்ளதோடு மக்கள் பிரச்சினைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்போம் என கடந்த ஆண்டு குறிப்பிட்டிருந்தது போல சமூகம் சார்ந்த மக்கள் செய்திகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம் என நினைக்கின்றோம்.

ஆனபோதிலும் இந்த ஆண்டு அரசியல் தரப்புக்களிடமிரந்து கடுமையான நெருக்கடியினை எதிர்கொண்டு பயணத்திருக்கின்றோம் என்ற செய்தியையும் பகிர்ந்து செல்லவேண்டியிருக்கின்றது. தமிழர்களின் உரிமைப் போராட்டங்களுக்கு எதிராக நின்று தமிழர்களின் வாக்குகளைப் பொறுக்கியபின் தமிழர் விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் தரப்புக்களை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தியதன் வெளிப்பாடே இந்த நெருக்கடிகளுக்கு காரணம் எனறு நினைக்கின்றோம்.
எனினும் எமது பயணம் அதே உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் தொடரும். இதற்கு வாசகர்களாகிய மக்களின் ஆதரவும் ஒத்துளைப்புமே எம்மை வலுப்படுத்தும்.

வர்த்தகர்கள் – ஆதரவாளர்கள் உதவிடுங்கள்

வாகீசத்தின் பணியாளர்கள் பெரும்பாலும் தமக்கான வேறு பணிகளை வைத்துக்கொண்டு வாகீசத்தை ஒரு மக்கள் பணியாகவே மேற்கொண்டுவருகின்றோம் என்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த ஆண்டு இரவு நேர செய்திப் பதிவேற்றங்களை நடத்திவந்த வாகீசம் தற்போது 24 மணி நேர செய்திப் பதிவெற்றங்களை மேற்கொண்டுள்ளது. எனினும் இணையத்தை பராமரிப்பதற்கான செலவுகளைச் சமாளிப்பதென்பது கொஞ்சம் கடினமான நிலைமைதான். வாகீசத்தில் விளம்பரம் செய்யும் வர்த்தகர்களை நம்பியே எமது பயணம் பயணிக்கிறது. ஆனாலும் விளம்பரங்களை நம்பியிருக்கும் இன்றைய உலகில் எமக்கு விளம்பரம் பெறுவது குதிரைக் கொம்பான நிலைமைதான். இதுவரையான காலத்தில் எமக்கு ஒத்துளைத்த வர்த்தகப் பெருந்தகைகளிற்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வாகீசத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வர்த்தகர்கள் மற்றும் நிதிசார் ஆதரவாளர்களின் பங்களிப்பினை இந் தருணத்தில் எதிர்பார்க்கின்றோம்.

வாகசர்கள் விளம்பரதாரர்கள் நலன்விரும்பிகள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

நன்றி

வாகீசம் இணையக் குடும்பத்தினர்
தொடர்புகளிற்கு – vakeesamnews@gmail.com
0094 777 795 743

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com