சற்று முன்
Home / செய்திகள் / வேலுப்பிள்ளை செல்வநாயகத்தின் கோரிக்கையை செவிமடுத்திருந்தால் வேலுப்பிள்ளை பிரபாகரன் தோன்றியிருக்க மாட்டார்.

வேலுப்பிள்ளை செல்வநாயகத்தின் கோரிக்கையை செவிமடுத்திருந்தால் வேலுப்பிள்ளை பிரபாகரன் தோன்றியிருக்க மாட்டார்.

sivajilinkamதமிழரசு கட்சியின் தலைவர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகத்தின் கோரிக்கையை தென்னிலங்கை செவிமடுத்திருந்தால் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தோன்றியிருக்க மாட்டார். அதே போல் தற்போது வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரது கோரிக்கையை தென்னிலங்கை அரசு செவிமடுக்கா விட்டால் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து முன்னர் நடைபெற்ற சம்பவங்களில் இருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் தீர்வு திட்டம் ஊடகவியலாளர்களிடம் உத்தியோக பூர்வமாக இன்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளது. இதனை வடக்கு மாகாண சபை சார்பாக பேரவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் கையளித்து வைத்தார். இன்று மதியம் நடைபெற்ற ஊடக சந்திப்பினை அடுத்தே மேற்படி கையளிப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது. அதன்போது கருத்து தெரிவிதபோதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலம் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண சபையின் தீர்வுத்திட்ட முன்மொழிவைக்கண்டு கூச்சலிடுவதையும் முதலமைச்சருக்கு எதிராக பேசுவததையும் ஏற்றுக்கொள்ள முடியாது. உலகில் இல்லாத எந்த அதிகாரத்தையும் நாங்கள் கேட்கவில்லை. அதனை பிரிவினை வாதம் எனகூறாதீர்கள், எமக்கு சுயநிர்ணய உரிமைஇருக்கிறது. வடக்கு கிழக்கு இணைந்த மானிலம் வேண்டும் என நாம் கேட்கின்றோம்.

முதன்முதலில் சமஸ்டி கோரிக்கைஒன்றினை சிங்களவர்களே முன்வைத்திருந்தனர். 1926 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் கண்டி, வடக்கு, கரையோரம் என மூன்று சமஸ்டி பிராந்திய யோசனை முன்வைக்கப்பட்டது. அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் 1930 இலேயே இனப்பிரச்சனைக்கு தீர்வுகிடைத்திருக்கும். 1949 தந்தை செல்வாசெல்வநாயகம் தமிழரசுக் கட்சியைத் தோற்றுவித்து சமஷ்டிக் கோரிக்கையை மீண்டும் முன்வைத்திருக்க வேண்டி தேவை இருந்திருக்காது என்றார்.

 

 

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com