வீமன்காமம் பகுதியில் இருந்தது சித்திரவதை முகாம் அல்ல, மருத்துவ ஆய்வுகூடம் என்கிறது இராணுவம்.

இராணுவ முகாமினுள் அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ ஆய்வு கூட முகாமையே சிலர் இராணுவத்தின் சித்திரவதை முகாம் என பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்கள்.என இலங்கை இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இராணுவ முகாமினுள் அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ ஆய்வு கூட முகாமையே சிலர் இராணுவத்தின் சித்திரவதை முகாம் என பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்கள்.
 மருத்துவ ஆய்வு கூடத்தை விடுதலைப்புலிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவே வீட்டு கூரை பகுதியில் முட்கம்பிகள் பொறுத்த பட்டு இருந்தன. தற்போது பொதுமக்கள் மீள் குடியேற காணிகள் விடுவிக்க பட்டு உள்ளதால் அந்த வீட்டின் முட்கம்பிகளை அகற்றி சுற்ற படுத்தியதாக தெரிவித்தார்.
வலி.வடக்கு வீமன்காமம் பகுதியில் உள்ள இரு வீட்டின் மேல் கூரையில் முட்கம்பி வேயப்பட்ட நிலையில் காணப்பட்டன. அத்துடன் சுவரில் சிங்கள எழுத்துகளும் எழுதப்பட்டு இருந்தன. அதனால் அவை இராணுவத்தின் சித்திரவதை முகாமாக இருந்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்து இருந்தன.
அந்நிலையில் திங்கட்கிழமை அப்பகுதிக்கு சென்ற இராணுவத்தினர் வீட்டு கூரையில் வேயபட்டு இருந்த முட்கம்பிகளை அகற்றியதுடன் இ வீட்டு சுவரில் எழுதி இருந்த சிங்கள எழுத்துகளை வெள்ளை வர்ணம் பூசி மறைத்து உள்ளனர். அது தொடர்பில் இராணுவ ஊடக பேச்சாளரிடம் கேட்ட போதே அவ்வாறு பதிலளித்து இருந்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*