விமல் வீரவங்ச பொலிஸ் நிதிமோசடி விசாரணை பிரிவில் ஆஜரானார்.

Vimalதேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச, பொலிஸ் நிதிமோசடி விசாரணை பிரிவில் இன்று (14) ஆஜரானார்.

கடந்த அரசாங்க காலத்தில் வீடமைப்பு, பொறியியல் மற்றும் கட்டுமான அமைச்சராக இருந்தபோது, ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவே அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வாரம் (07) FCID இல் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டிருந்த அவர், தான் சுகவீனமுற்றிருப்பதாக தெரிவித்து தனக்கு மற்றுமொரு தினத்தில் வாக்குமூலம் வழங்குவதற்கான வாய்ப்பை வழங்குமாறு தெரிவித்து அங்கிருந்து சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*