வலி வடக்கு மக்கள் அதிர்ச்சி; ஏமாற்றம் – யாழ் வந்த மைத்திரியுடன் கூட்டமைப்பு எம்பிக்கள் கேக் வெட்டிக் கொண்டாட்டம்

Sara - Uthayan“ஜனாதிபதி மைத்திபாலாவை நாங்கள் தேவ தூதகாகவே பார்த்தோம். அவர் தென்னிலங்கையிலும் சரி வெளிநாடுகளிலும் சரி தமிழ் மக்கள் தங்கள் காணிகளைத்தான் கேட்கிறார்கள் என்று பேசியிருந்தார். இதனைக் கேட்கும்போது எமது காணிகளை விடுவிப்பதாகச் சொன்ன அவரது வாக்குறுதிகள் நிறைவேறும் என்று நம்பினோம். எல்லாம் ஏமாற்றமாகப்போய்விட்டது”

அவ்வாறு கூறிக்கொண்டு யாழ். துரையப்பா விளையாட்டரங்கை விட்டு அந்தப் பெயரியவர் நேற்றையதினம் வெளியேறும்போது அவரது குரல் தளதளர்த்துவிட்டது. அவர்களைப் பொறுத்தவரை இது அவர்களது இருபத்தைந்துவருடத் தவம். தமிழினம் வாக்குறுதிகளை நம்பி நம்பி ஏமாந்துபோன இனமாகத்தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கின்றது. இந்த ஏமாற்றங்கள் அவர்களைப் பொறுத்தவரை இவ்வாறு பல வாக்குறுதிகளை நம்பி நம்பி ஏமாந்து பழக்கப்பட்டுவிட்டார்கள். ஆனால் அவர்கள் யாரை தங்கள் மீட்பார்களாக நம்பி வாக்களித்தார்களோ அவர்களே இந்த மக்களின் தலையில் மண் அள்ளிக்கொட்டும் செயற்பாடுகளில் தீவிரம்காட்டிநிற்பதுதான் அந்த மக்களின் ஆற்ற முடியாப் பெருந்துயருக்கு காரணமாகிவிட்டது.

துரையப்பா விளையாட்டரைங்கைத் திறந்துவைக்க வந்த ஜனாதிபதி மைத்திர்பால சிறிசேன ஆறு மாதத்திற்குள் தங்களை மீள்குடியேறுவதாக வாக்களித்திருந்தார் நிச்சயமாக தனது உரையில் சாதகமான சமிக்ஞை ஒன்றினை வெளிப்படுத்துவார் என்று அந்தப் பன்னிரண்டாயிரம் மக்களைத் தாண்டி எல்லோர் மனங்களிலும் ஒரு அங்கலாப்பு இருக்கத்தான் செய்திருந்தது. துரையப்பா விளையாட்டரங்கிற்கு முற்பகல் 10.10 இற்கு வந்த ஜனாதிபதி சிற்றுரை ஆற்றிவிட்டு 11 மணிக்கெல்லாம் அங்கிருந்துவெளியேறிவிட்டார்.

அவரது வருகைக்குப் பின்னால் ஒரு இரகசிய நிகழ்ச்சிநிரல் இருந்தது என்பதும் அது மக்களை ஏமாற்றிப் பிளைப்பு நடத்தும் சில சந்தா்ப்பவாத கூட்டமைப்பு உறுப்பினர்களின் தனி நலன்சார்ந்த நிகழ்ச்சிநிரல் என்பதும் துரையப்பாவில் ஜனாதிபதியின் உரைகேட்க வந்த மக்களிற்கோ ஊடகவியலாளருக்கோ தெரிந்திருக்க வாய்ப்பிருக்கவில்லை.

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகள் தனது பிறந்தநாள் விழாவிற்கு ஜனாதிபதியை அழைத்து கேக் வெட்டிக்கொண்டாட ஆசைப்பட்டிருக்கலாம். அந்த உறுப்பினரின் முதலீட்டில் தொடங்கப்பட்விருந்த புதுவிதிக்கு ஜனாதிபதியை அழைக்கவேண்டும் என அவரின் ஊடக வாரிசுகள் ஆசைப்பட்டிருக்கலாம்.
பிரித்தானிய ஜனாதிபதியை அலுவலகத்திற்கு அழைத்தவரிற்கு இலங்கை ஜனாதிபதியை வீட்டிற்கு அழைப்பது இயலாத காரியமாக இருந்திருக்கவாய்ப்பில்லை.

ஆனி 20 இற்குள் மீளக் குடியேற்றுவேன் என்றவரையும் ஆனி 12 இற்குள் மீளக் குடியேற்றாவிட்டால் வெடிக்கும் என்றவரையும் ஒன்றாய் அழைத்து கேக் வெட்டி விருந்து வைப்பது என்பது சாணக்கியரை மிஞ்சிய சாணக்கியம்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி தேசிய நத்தார் விழா கொண்டாட வந்த ஜனாபதிபதியை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது உறுதியாக வலுக்கட்டாய முயற்சியால் வலி.வடக்கு மக்களின் முகாம்களிற்கு அழைத்துச் சென்று அவர்களின் சமையலறை வரை பார்வையிட வைத்தார் அந்த நிகழ்வுகளில் நெகிழந்துபோனதால் தான் ஜனாதிபதிய அன்றையதினம் மாலை நடைபெற்ற தேசிய நத்தார் விழாவில் வலிவடக்கு மக்களை ஆறு மாத காலத்திற்குள் மீளக் குடியமர்த்துவேன் என வாக்குறுதியளித்தார்.

ஆனால் மக்களின் வலிகள் குறித்து உணர முடியாததும் ஜனாதிபதியின் வாக்குறுதி குறித்து அவரிற்கு அழுத்தம் கொடுக்கத் தயாரில்லாததுமான கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஜனாதிபதியின் யாழ் விஜயத்தை மக்களிற்குச் சாதகமாக்காது தங்கள் தனிப்பட்ட சுகபோகங்களிற்கு சாதகமாக்கியிருக்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*