சற்று முன்
Home / செய்திகள் / வலி வடக்கு பிரதேச சபை செயலாளரை இடமாற்றம் செய்ய தவிசாளர் சதி – 26 உறுப்பினர்கள் எதிராக போர்க்கொடி

வலி வடக்கு பிரதேச சபை செயலாளரை இடமாற்றம் செய்ய தவிசாளர் சதி – 26 உறுப்பினர்கள் எதிராக போர்க்கொடி

தமது அதிகார துஸ்பிரயோகம் மற்றும் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட்ட சபையின் செயலாளர் பகீரதனை வலி வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சுகிர்தனும் அவருடன் சில தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் இணைந்து இடமாற்றம் செய்ய முற்பட்டமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளதோடு சபையின் 26 உறுப்பினர்கள் இணைந்து அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வலி வடக்கு பிரதேச சபைச் செயலாளர் பகீரதன் சபை உறுப்பினர்களுடன் ஒத்துளைப்பாக இல்லை எனக் கூறி வடக்கு மாகாண பிரதம செயலர் பத்திநாதன் ஊடக அவரை இடம்மாற்றுவதற்கு வலி வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சுகிர்தனும் அவருடன் சில தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் இணைந்து திரைமறைவில் செயற்பட்டிருந்தனர்.

இந்நிலையில் சுகிந்தனின் இந்த சதி நடவடிக்கையை அறிந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 06 உள்ளிட்ட ஏனைய கட்சிகளைச் சேர்ந்த 26 உறுப்பினர்கள் இணைந்து
தமது பிரதேச சபையின் செயலர் மீது தமக்கு நம்பிக்கை உள்ளதாகவும் அதிகார துஸ்பிரயோகம் ஊழல் ஆகியவற்றை தடுக்க முற்பட்ட நிலையிலேயே அவரை சிலர் இடமற்றம் செய்ய முற்பட்டதாகவும் குறிப்பிட்டு அவரது இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கைஒப்பமிட்டு கடிதம் ஒன்றினை ஆளுநருக்கும் பிரதம செயலருக்கும் அனுப்பிவைத்துள்ளனர்.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் முன்னர் பணியாற்றிய செயலாளரும் தனது தன்னிச்சை நடவடிக்கைகளுக்கு ஒத்துளைக்காத காரணத்தாலே சுகிர்தனினால் அரசியல் செல்வாக்கின் ஊடக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com