வரி இல்லா வாகன கொள்வனவை நிறுத்தினால் வற் வரி தேவையில்லையே – அனுரகுமார திசாநாயக்க கேள்வி

anuraஅமைச்சர்களுக்கும், பிரதமருக்கும் வாகனம் கொள்வனவு செய்ய ஒதுக்கியுள்ள நிதியை நிறுத்தினால் வற் வரி தேவைப்படாது. மனசாட்சியுள்ள எவரும் இந்த வரிக்கு ஆதரவாக கைதூக்க மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ள  எதிர்த்தரப்பு பிரதம கொரடா அநுர குமார திசாநாயக்க (ஜே. வி. பி)  கோடிக் கணக்கில் மக்களின் பணத்தை திருடிய, மோசடியாளர்களை பாதுகாத்தவாறு மக்கள் மீது சுமையேற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கையை அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

வற் வரி திருத்த சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அநுரகுமார திசாநாயக்க எம்.பி. மேலும் கூறியதாவது,

மக்களின் பணத்தை சூறையாடும் கொள்ளை கும்பலாக அரசாங்கம் மாறியுள்ளது.

பாரிய கடன் சுமையிருந்தால் அரசாங்கம் ஏன் 30 பேருக்கு பதிலாக அமைச்சர் தொகையை 48 ஆக அதிகரித்தது. மக்கள் மட்டுமா வயிற்றை கட்டிக்கொள்ள வேண்டும்? ஆட்சியாளர்கள் வயிற்றை கட்டிக்கொள்ளத் தேவையில்லையா?

அமைச்சர்களுக்கு வாகனம் கொள்வனவு செய்வதற்காக 118 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு வாகனம் கொள்வனவு செய்வதற்காக 30 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை நிறுத்தினால் வற் வரி தேவைப்படாது வற் உயர்வினூடாக அரசாங்கம் 180 கோடி ரூபா திரட்ட எதிர்பார்க்கிறது.

சொத்துக்களை விற்று நோயாளிகளை இருதய சத்திர சிகிச்சை செய்கின்றனர். இதற்கும் வரியை அதிகரித்து மனிதாபமின்றி ஆட்சியாளர்கள் சொகுசு வாழ்வு வாழ்கின்றனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*