யோஷிதவின் CSN தொலைக்காட்சி அலைவரிசைக்கு தடை

csnஉடனடியாக அமுலுக்கு வரும் வகையில் CSN  தொலைக்காட்சி அலைவரிசையின் ஒலிபரப்பு தொடர்பான அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

யோஷி ராஜபக்ஷவுக்கு சொந்தமான CSN (Carlton Sports Network)  தொலைக்காட்சி நிறுவனம், அனுமதிப்பத்திர விதிகளை மீறி செயற்பட்டுள்ளதாக தெரிவித்து, அதன் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்துள்ளதாக, வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் நிமல் போபகே தெரிவித்தார்.

இது தொடர்பில் CSN நிறுவன பணிப்பாளரான ரொஹான் வெலிவிட்டவுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 2011 மார்ச் 03 ஆம் திகதி, CSN விளையாட்டு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஒலிபரப்பு உரிமம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த நிறுவனத்தை ஆரம்பித்தமை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பில், யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் மீது வழக்கு தொடரப்பட்டு அவ்வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*