யாழ் மாவட்டத்தில் 15 கட்சிகள் 6 சுயேட்சைகள் களத்தில் – 8 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

(யாழ் – 13.07.2015) பாராளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் 15 கட்சிகளினதும், 6 சுயேட்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள்  ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். 

இன்று நண்பகல் 12 மணியுடன் வேட்புமனுத் தாக்கலிற்கான நேரம் நிறைவடைந்த நிலையில் அரசியற் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் மீதான ஆட்சேபனை தெரிவிக்கும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

அதன்பின்னர் வேட்புமனுக்களை ஏற்றல் மற்றும் நிராகரித்தல் தொடர்பான விளக்கமளிப்பு கட்சிகளிற்கு நடைபெற்றபின் யாழ். மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. அதன்போதே ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் விளக்கமளித்தார்.

யாழ். மாவட்டத்தில் 17 கட்சிகளும், 12 சுயேட்சைக் குழுக்களுமாக 29 கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தன. வேட்புமனுக்கள் தொடர்பான பரிசீலனையின்  முடிவில் 15 கட்சிகளினதும், 6 சுயேட்சைக் குழுக்ககளினதும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 6 சுயேட்சைக்குளுக்களினதும் 2 அரசியற் கட்சிகளினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

 எங்கள் இலங்கை சுதந்திர முண்னணி மற்றும் ஐக்கிய மக்கள் கட்சி உட்பட ஞானப்பிரகாசம் அன்ரன், நீக்கலஸ், சத்தியேந்திரா சாம்பசிவம், முருகன் குமாரவேல், கருப்பையா ஜெயக்குமார், சுந்தரலிங்கம் சிவதர்சன், சின்னத்துரை சிவகுமார் உள்ளிட்ட சுயேச்சைக் குழுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்கள் கடந்த 6ம் திகதி தொடங்கி இன்று நண்பகல் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*