யாழ். உரும்பிராயில் இளைஞன் மீது பொலிசார் தாக்குதல் ! – தமது பிரதேச பொலிஸ் தாக்கவில்லை என கோப்பாய் பொலிஸ் மறுப்பு

policeயாழ். உரும்பிராய் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது பொலிசார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கோப்பாய் பொலிசில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை விசாரித்த கோப்பாய்ப் பொலிசார் தமது பிரதேசத்திற்குட்பட்ட பெலிசார் யாரும் இத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

பொலிசார் வந்ததாக கூறும் மோட்டார் சைக்கிள் கோப்பாய் பொலிசாரிடம் இல்லை எனவும் , இன்றைய தினம் வெளிக்கடமைக்கு சென்ற அனைத்து பொலிசாரையும் அழைத்து இளைஞர் முன் முற்படுத்திய போதிலும் , இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிசாரை இளைஞன் அடையாளம் காட்டாததால் , கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிசார் தாக்குதல் நடத்தவில்லை என மறுத்துள்ளனர்.

உரும்பிராய் சந்திக்கு அருகாமையில் இன்றைய தினம் திங்கட்கிழமை இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார் அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரு பொலிசார் இளைஞரை வீதியில் மறித்து அவர் மீது தாக்குதலை மேற்கொண்டு உள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதியாகும்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

உரும்பிராய் சந்தி பகுதி கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியாகும். இருந்த போதிலும் இளைஞர் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிசார் தமது பொலிஸ் நிலையத்தை சேராதவர்கள் என கோப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இருந்த போதிலும் முறைப்பாட்டின் பிரகாரம் தாம் உரிய விசாரணைகளை முன்னெடுத்து தாக்குதலாளிகள் யார் என்பதனை கண்டறிவோம் என பொலிசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*