யாழில் தனியார் மருத்துவக் கல்லூரி கேட்கும் கூட்டமைப்பு வியாபாரிகள்

tnaயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிள்ளைகள், கல்விகற்க ஆர்வமாக உள்ளனர். அதனால், யாழ்ப்பாணத்தில் இரு தனியார் மருத்துவக் கல்லூரிகளை நியமிக்குமாறு, அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்று, சபை முதல்வரும் உயர்க்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் மாலம்பேயில் அமைந்துள்ள தனியார் மருத்துவக்கல்லூரிக்கு எதிராக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பீட மாணவர்கள் போராடிவரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் இரு தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பிக்க கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

ஏற்கனவே யாழ்.பல்லைக்கழக மருத்துவ பீடமும் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக குரல் கொடுத்துவரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் தனியார் மருத்துவ கல்லூரி அமைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*