முஸ்லீம் அரசியற் தலைவர்களின் தவறுகளை மறக்கவும் முடியாது – முஸ்லீம் மக்களைப் புறந்தள்ளவும் முடியாது – எதிர்க்கட்சித் தலைவர்

vakeesam-braking-newsதமிழருக்கு எதிராக முஸ்லீம் அரசியல் தலைவர்கள் புரிந்த தவறுகளை மறந்துவிட முடியாது எனத் தெரிவித்துள்ள இலங்கை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தலைவருமான இரா.சம்பந்தன் அதற்காக நாம் முஸ்லீம் மக்களைப் புறந்தள்ளிவிடமுடியாது என்றும் முஸ்லீம் மக்கள் தமிழர்களிற்கு சமாந்தரமான அதிகாரங்களுடன் வடக்கு கிழக்கில் வாழ்வதற்கான உரித்துடைய பிரஜைகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கிலிருந்து முஸ்லீம் மக்கள் வெயேற்றப்பட்ட நினைவுநாள் அரங்கு ஒன்று கொழும்பில் இன்று (30) நடைபெற்றது. நிகழ்விற்கு பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு உரையாற்றிய அவர்,

விரையில் அரசியல் தீர்வு பகிரப்படவுள்ளது அதற்காக தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். எமக்கு அரசியல் தீர்வு வழங்கவேண்டும் என்று இலங்கை அரசிற்கு இன்று கூடுதலான அழுத்தங்கள் வருகின்றது. இவை ஜெனீவா தீர்மானங்களின் காரணமாகத்தான் ஏற்பட்டன. 2012 ஆம் ஆண்டு ஜெனீவாவில் முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது அதில் வெற்றிபெறுவதற்காக நாங்கள் கடுமையாக உழைத்தபோது முஸ்லீம் தலைவர்கள் வெவ்வேறு முஸ்லீம் நாடுகளிற்குச் சென்று ராஜபக்ச அரசின் சார்பில் எமக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்கள். அந்த தீர்மானத்தை தடுப்பதற்காக போராடினார்கள். அவற்றை நாம் மறந்துவிட முடியாது.

அதற்காக முஸ்லீம் மக்களை உதாசீனம் செய்ய முடியாது. நிச்சயமாக அது எம்மால் முடியாது.

முஸ்லீம் அரசியல் தலைவர்கள் காலத்திற்கு காலம் ஒவ்வொரு அரசாங்கத்திலும் அமைச்சுப்பதவிகளைப் பெற்றுவந்திருக்கிறார்கள். மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தார்கள். இப்போதும் அமைச்சர்களாக இருக்கிறார்கள். புனர்வாழ்வு அமைச்சர்களாக இருந்தார்கள். ஏன் அவர்கள் உங்கள் மீள்குடியேற்றம் உள்ளிட்ட விடையங்களில் அக்கறை காட்டவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*