சற்று முன்
Home / செய்திகள் / மாமனிதர் ஜேசப் பரராஜசிங்கம் வழியில் தமிழ் முஸ்லீம் உறவு கட்டியெழுப்பப்பட வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மாமனிதர் ஜேசப் பரராஜசிங்கம் வழியில் தமிழ் முஸ்லீம் உறவு கட்டியெழுப்பப்பட வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

பிழையான முஸ்லிம் தலைமைத்துவங்களை மீறியும் முஸ்லிம்கள் சிவில் சமூகங்கள் ஊடாக தமிழ் முஸ்லிம் உறவினை கட்டியெழுப்பியவர் மாமனிதர் ஜோசப் பராஜசிங்கம். தமிழ் முஸ்லிம் உறவை கட்டியெழுப்ப மாமனிதர் செயற்பட்டமையால் தான் அவர் விசேஷமாக குறிவைக்கப்பட்டார் என தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணயின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் முஸ்லிம் உறவை கட்டியெழுப்ப நாங்கள் தொடர்ந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி அகதிகாலை 12 மணியளவில் நத்தார் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது மாமனிதர் ஜோசப் பராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார். மாமனிதரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோசப் பராஜசிங்கத்தின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு இன்று பிற்பகல் 5.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று நினைவுரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு உரையாற்றிய அவர்,

” கொக்கட்டிச்சோலை படுகொலை விசாரணை நடைபெற்ற போது அந்த குற்றத்தை புரிந்தவர்கள் தப்பிக்கும் நிலை காணப்பட்டிருந்தது. அப்போது அவர் தமிழர் விடுதலை கூட்டணியில் இருந்தாலும், என்னுடைய தந்தையை அணுகி இந்த படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வாதாடுமாறு கோரியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று எனது தந்தையும் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் ஆயராகி இருந்தார். இந்த விசாரணைகள் நடைபெற்ற காலப்பகுதியில் எனது தந்தையை பாதுகாக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தார்.

அந்தளவுக்கு கொக்கட்டிச்சோலை படுகொலைக்கு நீதி வேண்டும் என்ற உறுதியுடன் மாமனிதர் செயற்பட்டிருந்தார். எவ்வாறு மாற்று கட்சி உறுப்பினர்களுடன் எனது தந்தை நெருக்கமாக பழகுகின்றார் என நான் சிந்தித்தது உண்டு. எனினும் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் எமது போராட்டத்திற்கு மாறாக செயற்பட்டிருந்தாலும், தமிழர் விடுதலை கூட்டணியின் பாராளுமன்ற குழு என்ற பதவியை வைத்து கொண்டு எமக்காக கடுமையாக பாடுபட்டவர்.

என்னை பொறுத்தவரை இவரை கட்சி ரீதியாக பார்ப்பதனை காட்டிலும் ஒரு தனி மனிதனாக பார்க்க வேண்டும் என்று தான் கூறுவேன். 2001 ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாகிய போது, அதன் தேர்தல் வெற்றியும் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த காலப்பகுதியில் தான் என்னுடைய தாயுடன் பேசி என்னை அரசியலுக்குள் கொண்டு வந்தவர் தான் மாமனிதர் ஜோசப் பராஜசிங்கம். இந்தளவு தூரத்திற்கு எனது குடும்பம் அவர் மீது மதிப்பு வைத்திருந்தது.
குமார் உயிரோடு இருந்திருந்தால் எந்தளவுக்கு கஜனை அரசியலுக்குள் வளர்த்து விட்டிருப்பாரோ அந்தளவுக்கு நான் கஜனை அரசியலில் வளர்த்து விடுவேன் என்று அன்று கூறியிருந்தார். என்னுடைய தந்தையார் உட்பட எம்மோடு பழகிய பலர் மாமனிதர்களாக இருந்துள்ளனர். எனினும் அனைத்து மாமனிதர்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் ஒரு விசேச முக்கியத்துவம் இருக்கின்றது. ஏனைய மாமனிதர்கள் தமிழீழ விடுதலை புலிகளை பகிரங்கமாக ஆதரித்ததன் காரணத்தாலும்,
அல்லது அரசியல் ரீதியாக புலிகளை பலப்படுத்த முயன்றதன் காரணமாகவும் சுட்டு கொல்லப்பட்டனர். ஆனால் மாமனிதர்களான ஜோசப் பரராச சிங்கம் மற்றும் விக்னேஸ்வரன் ஆகிய இருவரும், புலிகள் இரண்டாக பிளவடைந்த நிலையிலும் வல்லரசுகள் புலிகளை அழிப்பதற்கு முன்னின்று செயற்பட்டு கொண்டிருந்த நிலையிலும், எமது விடுதலை போராட்டம் கேள்விக்குறியாக்கிய நிலையில், மட்டக்களப்பில் இருந்து கொண்டு செயற்பட்டவர்.

இன்று மாமனிதர் விக்னேஸ்வரன் அல்லது ஜோசப் பராஜசிங்கம் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், தற்போது இருக்கும் தலைமைத்துவம் ஓரங்கட்டப்பட்டிருக்கும். அதற்போது கிழக்கு மாகாணத்தை தமிழர்கள் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாமனிதர் ஜோசப் பராஜசிங்கம் இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. தமிழ் முஸ்லிம் மக்களுடைய உறவு கட்டியெழுப்பபட்டிருக்கும். பிழையான முஸ்லிம் தலைமைத்துவங்களை மீறியும் முஸ்லிம்கள் சிவில் சமூகங்கள் ஊடாக தமிழ் முஸ்லிம் உறவினை கட்டியெழுப்பியவர்.

தமிழ் முஸ்லிம் உறவை கட்டியெழுப்ப மாமனிதர் செயற்பட்டமையால் தான் அவர் விசேஷமாக குறிவைக்கப்பட்டார். இந்த உண்மைகள் எமது மக்களுக்கு போய் சேர வேண்டும். இந்த பண்ணி மேலும் தொடர வேண்டும். அவருடைய ஆழமான பங்களிப்பை எமது மக்களுக்கு கொண்டு சென்று எங்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் சரியான பாதையில் முன்செல்ல நாங்கள் பாலமாக அமைய வேண்டும். மாமனிதர் ஜோசப் பராஜசிங்கம் அவர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால் தமிழ்த்தேசிய முன்னணிக்கு அவர் தலைமை தாங்கியிருப்பார்” – என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com