மாணவர் படுகொலை விவகாரம் – மாணவர் குழு ஜனாதிபதியைச் சந்திக்கிறது

153297235dmஅண்மையில் யாழ். கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் இடம்பெற்ற கலைத்துறை பீட இரு மாணவர்களின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மாணவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் உள்ளிட்டவர்களுடன் நாளை நண்பகல் 12 மணிக்கு கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன் இன்று காலை மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் நிர்வாக செயற்பாடுகளை முடக்கும் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது._92160281_jaffna03

மாணவர் படுகொலைச் சம்பவத்திற்கு நீதிகோரி விரிவுரைகளைப் புறக்கணித்திருந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று திங்கட்கிழமை பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயற்பாடுகளையும் முடக்கி போராட்டம் நடத்தியுள்ளனர்.

பல்கலைக்கழக நுழைவாயிலைப் பூட்டி, துணை வேந்தர் வசந்தி அரசரட்னம் மற்றும் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், நிர்வாகத் துறை சார்ந்த பணியாளர்கள் எவரையும் உள்ளே செல்லவிடாமல் தடுத்திருந்தனர்._92160283_jaffna02

சம்பவத்தை அறிந்து பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்திருந்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பல்கலைக்கழக நிர்வாகத்துடனும் மாணவர் பிரதிநிதிகளுடனும் பேச்சுக்கள் நடத்த ஏற்பாடாகியிருந்ததையடுத்து, அதற்கு மட்டும் மாணவர்கள் அனுமதி வழங்கியிருந்தனர்.

பேச்சுவார்த்தையின்போது ஏற்பட்ட இணக்கநிலையினை அடுத்து அங்கு நிலைமை வழமைக்கு திரும்பியிருக்கிறது.

 

சுமார் மூன்று மணிநேரம் இப்பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரும் போராசிரியருமாகிய வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*