மாணவர்கள் திருப்பிய அனுப்பிய கடித்திற்கு தமிழில் மறுமொழி அனுப்பினார் ஆளுநர்

reginold-letterயாழ் பல்கலைக்கழக மாணவர்களால் வடக்கு மாகண ஆளுநருக்கு திருப்பி அனுப்ப்பட்ட கடித்திற்கான பதிலினை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜிலோள்ட் கூரே தமிழில் அனுப்பிவைத்துள்ளார்.

கொலையான மாணவர்களிற்கு நீதி வேண்டி யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஆளுநர் ஊடக ஆங்கில மொழியில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு வடக்கு ஆளுனர் சிங்கள மொழியில் அனுப்பிய பதில் கடிதத்தை மாணவர்கள் ஏற்க மறுத்து மீண்டும் அக் கடிதத்தை ஆளுநருக்கே அனுப்பி வைத்திருந்தனர்.
கடந்த திங்கள் அன்று யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் ஆளுநர் அலுவலகங்களை முற்றுகையிட்டு முடக்கிய யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஆளுனருக்கு ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட மகஜருக்கே ஆளுனர் குரே தனி சிங்களமொழியில் பதில் அனுப்பியுள்ளார்.

எனினும் ஆளுநர் அனுப்பிய பதில் கடிதம் சிங்களத்தில் உள்ளமையால் எழுதப்பட்டவை தங்களிற்குப் புரியவில்லையென தெரிவித்து அதனை ஆளுநர் ரெஜினோட் குரேக்கே பதிவு தபால் மூலமாக மாணவர்கள் திருப்பி அனுப்பியிருந்தனர்.

எனினும் தனக்கு வழங்கப்பட்ட மகஜர்கள் சிங்களத்திலேயே இருந்ததாகவும் அவற்றை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பியதற்கான சிங்கள மொழியிலான சான்றுப்பிரதியையே பல்கலைக்கழக மாணவர்களிற்கு அனுப்பியதாக சிங்கள ஊடகம் ஒன்றிற்கு விளக்களித்திருந்தார்.

இந்நிலையில் இன்று (27) மாணவர்களின் மகஜரை பிரதமருக்கு அனுப்பியதற்கான பிரதியை தமிழில் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிக்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*